தமிழகம்மாவட்டச் செய்திகள்

ராமநாதபுரத்தில் நாளை ஸ்டாலின் மகளிர் படை ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி கூட்டம்:காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ அறிக்கை!!!

ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க தலைவர்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க,இளைஞரணி செயலாளர்,துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி,தலைமை கழக அறிவிப்பின்படி,தமிழ்நாட்டு பெண்களை உலக அளவில் வெல்லும் தமிழ் பெண்களாக மாற்றி உள்ள முதலமைச்சரின் தலைமையிலான திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடர ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வீடு வாரியாக சென்று திராவிட மாடல் அரசு பெண்களுக்கு செய்துள்ள சாதனை திட்டங்களை மாற்றி 8-ம் தேதி வரை பரப்புரை மேற்கொள்வதற்கான குழுவினரில் பாகத்திற்கு ஒரு நபர் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்ட ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி ஸ்டாலின் மகளிர் படை ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி கூட்டம் நாளை காலை 10.30 மணி அளவில் பீமாஸ் வைஸ்ராய் மஹாலில் நடைபெற உள்ளது.அது சமயம் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொகுதி பார்வையாளர்கள்,ஒன்றிய,நகர,பேரூர் செயலாளர்கள் வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் மற்றும் வாக்குச்சாவடி ஸ்டாலின் மகளிர் படை ஒருங்கிணைப்பாளர்கள்,மாவட்ட,ஒன்றிய,நகர,பேரூர்,மகளிர் மற்றும் மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button