ராமநாதபுரத்தில் பெண்களுக்கு இலவச பனை ஓலை கருவித் தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி:50 பேருக்கு வழங்கப்பட்டது!!!

ராமநாதபுரத்தில் மத்திய ஜவுளி துறை அமைச்சகம் (கைவினைப் பொருட்கள்) ரீஜனல் இயக்குனர் ஸ்ரீ.லட்சுமண ராவ் அதுக்குரி கலந்து கொண்டு தலைமையேற்று துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் மத்திய அரசு ஜவுளி அமைச்சகம் உதவி இயக்குநர்,கைவினைப் பொருட்கள் சேவை மையம், நாகர்கோவில் எஸ்.வீனா,ராமநாதபுரம் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன்,பரமக்குடி அரசு ஐ.டி.ஐ முதல்வர் எஸ்.பி.வாழை ஆனந்தம், ராம்நாடு பணை ஓலை உற்பத்தியாளர் நிறுவனத்தின் சேர்மன் கல்யாணி கார்த்திகேயன் ஆகியோர் ராம்நாடு பனை ஓலை உற்பத்தியாளர் நிறுவனத்தில் உள்ள ஒரு 50 பெண்களுக்கு ரூபாய் 10,000 மதிப்புள்ள இலவச பனை ஓலை கருவித் தொகுப்புகள் மற்றும் இயந்திரங்களை வழங்கினர்.


இதன் மூலம் பனை ஓலைத் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் பணிப்பழுவைக் குறைக்கவும்,உற்பத்தியை அதிகரித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் முடியும்.இந்த நிகழ்ச்சியில் பனை ஓலை தயாரிக்கும் திரளான பெண்கள் கலந்து கொண்டு இலவச பனை ஓலை கருவித் தொகுப்புகள் மற்றும் இயந்திரங்களை வாங்கி சென்றனர்.



