ராமநாதபுரம் மாவட்ட திமுக கலை,இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் நியமனம்!!!

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி யூனியன் தாதனேந்தல் ஊராட்சி,பள்ளப்பச்சேரி கிராமத்தை சேர்ந்த திரைப்பட நடிகர்,சமூக ஆர்வலர் ராஜேந்திரன் திமுக மாவட்ட கலை,இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாவட்ட துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த காலங்களில் காஞ்சனா 2,கத்தி,துப்பாக்கி முனை போன்ற 10-க்கும் மேற்பட்ட படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.தான் நடத்தி வந்த தமிழக மக்கள் எழுச்சி கழகம் என்ற கட்சியை திமுகவோடு இணைத்து விட்டு திமுகவின் தீவிர ஆதரவாளராக பணியாற்றி வந்தார்.அதனைத் தொடர்ந்து ஒன்றிய பாஜக அரசு மற்றும் ஆளுநருக்கு எதிராக நவீன கோடாங்கி,நாகரீக கோமாளி,நவீன கருப்பசாமி மற்றும் இன்றைய அரசியல் நாட்டு நடப்பை நச்சுன்னு சொல்ல குறவன்,குறத்தி போன்ற விழிப்புணர்வு நாடகங்களை நடத்தி திமுக தலைமையின் கவனத்தை ஈர்த்தார்.
அதனைத் தொடர்ந்து தி.மு.க தலைவர்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில்,ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ பரிந்துரையின் பேரில் தி.மு.க கலை,இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் வாகை சந்திரசேகர் பள்ளப்பச்சேரி ராஜேந்திரனுக்கு மாவட்ட துணை அமைப்பாளராக பதவி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



