ஏர்வாடியில் பேருந்து நிழற்குடை திறப்பு!!!


ராமநாதபுரம் மாவட்டம்,கடலாடி யூனியன் ஏர்வாடி தர்ஹாவில் பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி நிதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடை திறப்பு விழா ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க செயலாளர் தேனி சை.அக்கீம் தலைமையில் நடைபெற்றது.


மாவட்ட தலைவர் திருப்பாலை கே.முனியசாமி,சட்டமன்ற தொகுதி செயலாளர் பா.பாலகுமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளர்களாக பசுமை தாயகம் மாநில துணை செயலாளர் கர்ணமஹாராஜன்,ஆதித்தமிழர் முன்னேற்ற கழக மாநில துணைப் பொதுச்செயலாளர் லெட்சுமணன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த பேருந்து நிழற்குடை அமைவதற்கு பெரிதும் முயற்சி எடுத்த பா.ம.க சிறுபான்மை பிரிவு தலைவர் முனைவர் எஸ்.ஷேக் முஹைதீன் கடலாடி யூனியன் பி.டி.ஓ ஜெய்ஆனந்த்,ஏர்வாடி ஊராட்சி செயலாளர் செல்லத்துரை,ஏர்வாடி முன்னாள் ஊராட்சி தலைவர் செய்யது அப்பாஸ்,ஏர்வாடி தர்ஹா ஹக்தார் கமிட்டி தலைவர் அஹமது ஆகியோர் பார்வையில் பேருந்து நிழற்குடையை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீகத்தலங்களில் ஒன்றாக விளங்கும் ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்ஹாவிற்கு ஜியாரத் செய்ய வருகை தரும் யாத்ரீகர்கள் பேருந்து நிழற்குடை இல்லாமல் அவதியடைந்து வருவதை கேள்வியுற்ற நான் எங்கள் அண்ணன் பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்களிடம் அவரது மாநிலங்களவை உறுப்பினர் நிதியில் இங்கு ஒரு பேருந்து நிழற்குடை அமைத்து தர கோரிக்கை வைத்தேன்.

அதனை கனிவுடன் ஏற்று ரு.15 லட்சம் நிதி தந்தார்.அந்த நிதியை துளியும் வீணடிக்காமல் நவீன முறையில் பேருந்து நிழற்குடை கட்டி முடித்து இன்று திறந்து வைத்துள்ளோம்.

மேலும் இந்த நிழற்குடைக்கு அருகாமையில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் விதமாக அறை ஒன்றும் ஒதுக்கப்பட்டுள்ளது.சமூக விரோத செயல்கள் ஏதேனும் அரங்கேறினால் அதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.





இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் பா.ம.க மாவட்ட மகளிர் சங்க செயலாளர் ராஜாமணி,ராமநாதபுரம் நகர் பொறுப்பாளர் அப்துல்காதர்,மாவட்ட அமைப்பு செயலாளர் ஜீவா,திருவாடானை சட்டமன்ற தொகுதி செயலாளர் காதர்ஷா,ராமேஸ்வரம் நகர் செயலாளர் முருகன்,கீழக்கரை நகர் செயலாளர் லோகநாதன்,ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் கார்த்திக்ராஜ்,மண்டபம் ஒன்றிய செயலாளர் மக்தும்கான்,திருவாடானை ஒன்றிய செயலாளர் தர்மராஜ்,ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய செயலாளர் மகேந்திரன்,சாயல்குடி ஒன்றிய செயலாளர் புஷ்பராஜ்,கடலாடி ஒன்றிய தலைவர் காளிமுத்து,மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் மண்டபம் வாபாக்ஷா,விவசாய அணி தலைவர் கணேசன்,ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய தலைவர் பஷீர் அஹமது,கீழக்கரை நகர் தலைவர் அப்துல் லத்தீப்,மாவட்ட மாணவர் அணி தலைவர் கபிஸ்ராஜ் உட்பட மாவட்டநகர ஒன்றிய பேரூர் கிளை பா.ம.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முடிவில் முடிவில் மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரவீன்குமார் நன்றி கூறினார்.



