போகலூர் என்.எஸ்.சி.பி.ஏ.வி உண்டு உறைவிட பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள்:தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தியது!!!

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் வட்டார வள மையத்தில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக வினாடி – வினா ஓவியப்போட்டி,பேச்சு போட்டி நிகழ்ச்சியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவஷ்ய வித்யாலயா (என்.எஸ்.சி.பி.ஏ.வி) உண்டு உறைவிடப்பள்ளி மாணவர்கள் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டு பேச்சு போட்டியில் 4 ம் வகுப்பு மாணவன் குட்டி விஷா இரண்டாம் பரிசும் ஓவியப்போட்டியில் மூன்றாம் வகுப்பு மாணவன் வேல்முருகன் முதல் பரிசும்,வினாடி வினா போட்டியில் 6,8 வகுப்பு மாணவர்கள் விமல்ராஜ் நவின் பவினேஷ் தர்ஷித் ஆகியோர் இரண்டாம் பரிசும் பெற்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவஷ்ய வித்யாலயா ( NSCBAV) உண்டுஉறைவிடப்பள்ளிக்கு பெறுமை சேர்த்துள்ளனர்.



மேற்கண்ட மாணவர்களையும்,அறிவியல் ஆசிரியை தாயம்மாள் ஆகியோரை பள்ளியின் தாளாளர் டாக்டர் ச.மாடசாமி பாராட்டினார்.மேலும் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு மற்றொரு நிகழ்ச்சியாக இரவு 7 மணிக்கு ராம்நாட் அஸ்ட்ரோ கிளப் மூலம் வானியல் நிகழ்வு ஏற்பாடு செய்து டெலஸ் கோப் தொலைநோக்கி கருவி மூலம் நிலவு,வியாழன் அதன் துணைக்கோல்கள் ஆகியவற்றை மாணவர்கள் கண்டு மகிழ்ந்தனர்.




ராம்நாட் அஸ்ட்ரோ கிளப் பொறுப்பாளர் ச.சொக்கநாதன் ஆசிரியர் அனைத்தையும் செய்து காண்பித்தும்,வானியல் பற்றி சிறப்பு வகுப்பு எடுத்தும்,அறிவியல்,விண்வெளி கிரகங்கள்தொலைதூரம் சார்ந்த விளக்கங்களையும் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து கல்வியின் உற்சாகத்தை ஊட்டினார்.மாணவர்கள் விண்வெளி பற்றிய சந்தேகங்களையும் ச.சொக்கநாதன் ஆசிரியரிடம் கேட்டு தெரிந்துகொண்டனர். இந்நிகழ்வில் கணித ஆசிரியை பூபதி,அறிவியல் ஆசிரியை தாயம்மாள் உடன் இருந்தனர்.இந்த தேசிய அறிவியல் தின நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் டாக்டர் ச.மாடசாமி சிறப்பாக செய்திருந்தார்.





