ராமநாதபுரத்தில் நாளை தி.மு.க செயற்குழு கூட்டம்:மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ அறிக்கை!!!

ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எதிர்வரும் மார்ச் 9 திருச்சியில் நடைபெறும் மாநில மாநாடு குறித்தும்,கட்சி ஆக்கப்பூர்வ பணி குறித்தும் கலந்துரையாடும் வகையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் பாரதிநகரில் உள்ள பீமாஸ் வைஸ்ராய் மஹாலில் நாளை மாலை 4.30 மணிக்கு மாவட்ட அவைத்தலைவர் வ.சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற உள்ளது. மண்டல தேர்தல் பொறுப்பாளர் நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,வனத்துறை அமைச்சர்,தேர்தல் பணிக்குழு தலைவர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன்,மாவட்ட பொருளாளர் செ.முருகேசன் எம்.எல்.ஏ மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் மாநில விவசாய தொழிலாளர் அணி துணைச் செயலாளர் கொடி சந்திரசேகர் (பரமக்குடி தொகுதி பார்வையாளர்),மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் அருண் (திருவாடானை தொகுதி பார்வையாளர்),புதுக்கோட்டை தெற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் மருத்துவர் எஸ்.சுதர்சன் (ராமநாதபுரம் தொகுதி பார்வையாளர்),விருதுநகர் தெற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன் (முதுகுளத்தூர் தொகுதி பார்வையாளர்) ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.ஆகவே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாநில,மாவட்ட நிர்வாகிகள்,தலைமை செயற்குழு,பொதுக்குழு உறுப்பினர்கள்,ஒன்றிய,நகர,பேரூர்,தி.மு.க செயலாளர்கள்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள் மற்றும் அனைத்து அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் மட்டும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



