ராமநாதபுரம்:அ.தி.மு.க மாவட்ட செயலாளரை சந்தித்த பா.ம.க நிர்வாகிகள்!!!


பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸை மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக அறிவித்த அ.தி.மு.க பொதுச்செயலாளருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ராமநாதபுரம் பா.ம.க கிழக்கு மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கீம் தலைமையிலான பா.ம.க நிர்வாகிகள் ராமநாதபுரம் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி நேரில் சந்தித்து மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.

தொடர்ந்து அ.தி.மு.க மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமியிடம் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க நிர்வாகிகளை மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கீம் அறிமுகம் செய்து வைத்தார்.இந்நிகழ்வில் பசுமைத்தாயக மாநில துணைச்செயலாளர் கர்ணமஹாராஜன்,ராமநாதபுரம் மாவட்ட பா.ம.க தலைவர் திருப்பாலை முனியசாமி,மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் நூருல் அமீன்,மாவட்ட மகளிர் சங்க செயலாளர் ராஜாமணி,மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் பிரவீன் குமார்,சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் பாலகுமரன் (ராமநாதபுரம்),முஹம்மது காதர்ஷா (திருவாடானை),ராமநாதபுரம் நகர் செயலாளர் மக்தூம் கான்,ஒன்றிய செயலாளர்கள் அப்துல் காதர் (மண்டபம்),இருளாண்டி (கடலாடி),தர்மராஜ் (திருவாடானை), மகேந்திரன் (ஆர்.எஸ்.மங்கலம்),கார்த்திக் ராஜா (ராமநாதபுரம்),ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய இணைச்செயலாளர் வின்செண்ட்,ஒன்றிய தலைவர்கள் மணி (திருவாடானை),திருவாடானை ஒன்றிய துணைச்செயலாளர் அஜீத்,ராமநாதபுரம் ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் மகேஷ்,தலைவர் சதீஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு நன்றி தெரிவித்தனர்.




அ.தி.மு.க மாநில விவசாய அணி துணைச்செயலாளர் சண்முக பாண்டியன்,முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் எஸ்.டி.செந்தில் குமார்,பேரூர் செயலாளர் எஸ்.கதிரேசன்,மாவட்ட மாணவரணி துணை செயலாளர் சிங்கராசு,11வது வார்டு செயலாளர் செல்லையா உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் உடனிருந்தனர்.



