தமிழகம்மாவட்டச் செய்திகள்

ராமநாதபுரம் தெற்கு ஒன்றியம் வன்னிக்குடியில் 29-ம் ஆண்டு மாபெரும் கிராம கபாடி போட்டி:ஒன்றிய செயலாளர் கே.டி.பிரபாகரன் தொடங்கி வைத்தார்!!!

ராமநாதபுரம் மாவட்டம் வன்னிக்குடி கிராமத்தில் கிராம பொதுமக்கள்,ஜேஎஸ்&எஸ்பிஎம் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து நடத்தும் செயற்கை ஆடுகளத்துடன் கூடிய 29-ம் ஆண்டு மாபெரும் கிராமிய கபாடி போட்டி கிராம அனைத்து பொதுமக்கள் தலைமையில் நடைபெற்றது.

ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர்,முன்னாள் யூனியன் சேர்மன் கே.டி.பிரபாகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்து முன்னிலை வகித்தார்.மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வன்னிக்குடி ரசாக் அனைவரையும் வரவேற்றார்.ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் வன்னிக்குடி விஜய்,ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் மஞ்சு (எ) ஹைதர் உள்ளிட்ட கிளை தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்றனர்.மொத்தம் 60 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.இறுதிப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் தி.மு.க மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் முகவை அக்பர்,திருப்புல்லாணி தி.மு.க ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் விவேக் ஆதித்தன்,ராமநாதபுரம் வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வன்னிவயல் அருண் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button