ராமநாதபுரத்தில் த.மு.மு.க ரூ.20 லட்சம் நோன்பு பெருநாள் உதவிகள்!!!

ராமநாதபுரம் மத்திய மாவட்டம் த.மு.மு.க சார்பாக வருடம் தோறும் நோன்பு பெருநாள் உதவிகள் எளியோர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.அதனைத் தொடர்ந்து இந்த வருடம் மாவட்ட அலுவலகத்தில்,த.மு.மு.க மாநில பொது செயலாளர் பேராசிரியர் ஜெ.ஹாஜாகனி கலந்து கொண்டு ரூ.20 லட்சம் நோன்பு பெருநாள் உதவிகள் தேவையுடைய மக்களுக்கு உதவி செய்யும் அடிப்படையில் சிறு தொழில் உதவியாக 110 பேருக்கு ரூ.13 லட்சம் ஆயிரம் பேருக்கு ரூ.4 லட்சம் மதிப்பில் புத்தாடைகளும் ரூ.3 லட்சம் மதிப்பில் உணவுப் பொருட்களும் வழங்கினர்.



இந்நிகழ்வில் த.மு.மு.க மாநில துணை பொது செயலாளர் முகவை எஸ்.சலிமுல்லாஹ்கான்,மாவட்ட தலைவர் பிரிமியர் இப்ராஹிம்,மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம்,மருத்துவ அணி மாவட்ட செயலாளர் முஹம்மது தமீம்மாவட்ட துணை செயலாளர் கவுன்சிலர் காதர் பிச்சை,வர்த்தக அணி துணை செயலாளர் பரக்கத்துல்லா மற்றும் நகர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



