தமிழகம்மாவட்டச் செய்திகள்

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க சார்பில் நாளை மாலை இஃப்தார் நிகழ்ச்சி:மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ அறிக்கை!!!

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள்,தொண்டர்கள் மற்றும் ஐக்கிய ஜமாத்தார்களுடன் இஸ்லாமியர்களின் புனித ரமலான் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி கேணிக்கரை யாஃபா மஹாலில் நாளை மாலை நடைபெறுகிறது என ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள்,தொண்டர்கள் ஐக்கிய ஜமாத்தார்களுடன் “இஸ்லாமியர்களின் புனித ரமலான் இஃப்தார் நோன்பு திறப்பு” நிகழ்ச்சியானது நாளை மாலை கேணிக்கரை யாஃபா மஹாலில் நடைபெறும்.ஆகவே அனைத்து ஐக்கிய ஜமாத்தைச் சேர்ந்த இஸ்லாமிய சொந்தங்கள்,மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button