ராமநாதபுரத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி:கலெக்டர் பங்கேற்பு!!!

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-யை முன்னிட்டு,ராமநாதபுரம் முஹம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பங்கேற்று கல்லூரியில் மாணவிகள் முன்னிலையில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி மேற்கொண்டதுடன்,மாணவிகளிடம் ஒவ்வொருவரும் வாக்குபதிவு நாளான (23.04.2026) அன்று தவறாமல் வாக்களித்து மாவட்டத்தில் அனைவரும் வாக்களிக்கப்பட்டது என்ற நிலையை உருவாக்கிட வேண்டும் என தெரிவித்தார்.


தொடர்ந்து மாணவிகளுடன் செல்பி பாயிண்டில் புகைப்படம் எடுத்து கொண்டதுடன்,ஒவ்வொரு மாணவிக்கும் வாக்காளர் வாக்களிப்பதன் அவசியம் குறித்த கையேட்டினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கினார்.

பின்னர் செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த குறும்படம் அதிநவீன மின்னணு திரை வாகனத்தில் திரையிடப்பட்டு சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று பார்வையிட்டு சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட திட்ட அலுவலர் பாபு,ராமநாதபுரம் முஹம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர்.மீரா,செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் லெ.பாண்டி,உதவி திட்ட அலுவலர் ராஜா முகமது,உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) நா.விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



