தமிழகம்மாவட்டச் செய்திகள்

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை அறிவிப்பு!!!

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த 23.04.2026-ம் தேதி நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக வாக்கு எண்ணிக்கையானது வருகின்ற 04.05.2026-ம் தேதி தேவிபட்டினம் காவல் நிலைய சரகம் புல்லங்குடி கிராமத்தின் அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில் நடைபெற உள்ளது. மேற்படி கல்லூரியில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாவட்ட காவல்துறையினர் சார்பாக பாதுகாப்பு திட்டம் தயார் செய்யப்பட்டு, காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மேற்படி பாதுகாப்பு திட்டத்தின் தொடர்ச்சியாக கல்லூரியிலிருந்து 100 மீ தொலைவிற்குள் வாகனங்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே, வருகின்ற 04.05.2026-ம் தேதி கீழ்கண்டவழிகளில் வரும் வாகனங்கள் வழித்தடம் பின்வருமாறு மாற்றியமைக்கப்படுகிறது.

  1. தேவிபட்டினத்திலிருந்து ராமநாதபுரம் நோக்கி வரும் வாகனங்கள் கோப்பேரிமடம் சோதனை சாவடியிலிருந்து சித்தார்கோட்டை, அத்தியூத்து, பனைக்குளம், நதிப்பாலம் வழியாக பட்டிணம்காத்தான் ECR வந்து பின்பு ராமநாதபுரம் செல்ல வேண்டும்.

2.ராமநாதபுரத்திலிருந்து தேவிபட்டினம் வழியாக திருவாடானை,காரைக்குடி,திருச்சி, தொண்டி செல்லும் வாகனங்கள் பட்டிணம்காத்தான் ECR வழியாக நதிப்பாலம், பனைக்குளம், அத்தியூத்து, சித்தார்கோட்டை, கோப்பேரிமடம் சோதனை சாவடி சென்று பின்பு தேவிபட்டிணம் வழியாக மேற்படி பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.

மேற்படி வழித்தட மாற்றமானது பாதுகாப்பு காரணங்களுக்காக 04.05.2026-ம் தேதி காலை 06.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை ஒருநாள் மட்டும் மாற்றம் செய்யப்பட உள்ளது.

எனவே,மாவட்ட காவல்துறையின் சார்பில் பொதுமக்கள் அனைவரும் மேற்படி குறிப்பிடப்பட்டுள்ள வழித்தடங்களின் வழியாக பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button