உலக பத்திரிக்கை சுதந்திர தின அறிக்கை!!!

காலை அஞ்சல் நாளிதழ் மற்றும் அதிரடி செய்தி புலனாய்வு இதழ் ஆசிரியர் தேனி சை.ஹக்கீம் சேட் மரைக்காயர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பத்திரிக்கை சுதந்திரம் என்பது மனித உரிமைகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.1993 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஆண்டுதோறும் மே 3ம் தேதி பத்திரிக்கை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.மனித உரிமைகள் சாசனம் பகுதி 19-ல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் சபையில் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.அடிப்படை உரிமைகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் பத்திரிக்கை சுதந்திரம் இருக்க வேண்டும் என யுனெஸ்கோ கூறுகிறது.மேலும் பத்திரிக்கையையும், பத்திரிக்கை சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் எனவும் கூறுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



