தமிழகம்மாவட்டச் செய்திகள்

த.வெ.க ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!!!

ராமநாதபுரம் மாவட்டம்,ராமநாதபுரம் யூனியன்,சித்தார்கோட்டை ஊராட்சியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேக்கரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தவெக ஆதரவாளர்கள் முஹம்மது உவைஸ்,முஹம்மது ரைசுதீன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை பிடித்து தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டு ஆட்சி அமைப்பதில் குளறுபடி ஏற்பட்டது.இதனால் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதை தடுக்கும் மத்திய பா.ஜ.க அரசின் சூழ்ச்சியாக செயல்படும் தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேக்கரை கண்டிக்கும் விதமாக ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள சித்தார் கோட்டை பேருந்து நிறுத்தம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக பொறுப்பு ஆளுநரை கண்டிக்கும் விதமாக தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முடிவீரன் பட்டினம் கிளை செயலாளர் கணேச மூர்த்தி,முடிவீரன்பட்டினம் கவியரசன்,மணிகண்டன்,அம்மாரி கருணாமூர்த்தி, குலசேகரக்கால் ஹார்சன்,ராசு,கலை,வாளூர் கிளை முஹம்மது நிஷார் மற்றும் காதர் முகைதீன்,பழனிவலசை இலக்கியா,காசி,பாண்டி,தினேஷ் மற்றும் சந்திரசேகர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு ஆட்சியமைக்க ஆதரவு வழங்கிய காங்கிரஸ்,வி.சி.க,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button