தமிழகம்மாவட்டச் செய்திகள்

கொங்கு நாட்டு உணவுத் திருவிழா!!!

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் (TTDC) கீழ் இயங்கும் ராமேசுவரம் (அக்னிதீர்த்தம் அருகில்) ஹோட்டல் தமிழ்நாட்டில் குறைந்த வாடகையில் இலவச காலை மற்றும் இரவு உணவு வசதியுடன் கூடிய குளிர் சாதன வசதி உள்ள அறைகளும்,குளிர் சாதன வசதி அல்லாத அறைகளும்,விசாலமான கார் நிறுத்துமிடம் மற்றும் குழந்தைகள் விளையாட்டு சாதனங்களுடான்கூடிய வசதிகள் உள்ளது.ராமேசுவரம் மட்டுமில்லாமல் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கிளைகளிலும் வரும் மே மாதம் 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் “கொங்கு நாட்டு உணவுத் திருவிழா” நடைபெற உள்ளது.

திருவிழாவின் சிறப்பம்சங்கள்:-

கொங்கு மண்டலத்தின் தனித்துவமான சுவைகளை அறிமுகப்படுத்தும் வகையில்,அமுதகம் உணவகத்தில் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை இந்த உணவுத் திருவிழா நடைபெறும்.இதில் கொங்கு உணவுகளுக்கே உரிய மிதமான காரம் மற்றும் இயற்கையான நறுமணத்துடன் கூடிய பாரம்பரிய உணவுகள் உயர்தர சைவம் உணவு பரிமாறப்பட உள்ளன.இந்த உணவு திருவிழாவிற்க்கு வருகை தருபவர்களுக்குத் தலா ஒருவருக்கு ரூ.250/- வசூல் செய்ய உத்தேசிக்கப்பட்டது.

கூடுதல் கவர்ச்சிகள்:-

உணவகத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக் கூடிய கொங்கு நாட்டு சமையல் செயற்கை நிறமூட்டிகளோ,சுவையூட்டிகளோ சேர்க்கப்படாமல் தரமானதாக தயார் செய்து வழங்கப்பட உள்ளது.ராமேசுவரம் மக்கள் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் கொங்கு நாட்டு உணவினை ருசித்து அனுபவிக்க ராமேசுவரம் மக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்விழாவிற்கு இருக்கைகள் முன்பதிவு செய்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண் 9566968930,7358103766 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என சுற்றுலாத்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ள  செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button