தமிழகம்மாவட்டச் செய்திகள்

முதல்வர் ஜோசப் விஜய்க்கு கோரிக்கை!!!

தமிழகத்தின் அனைத்து விவசாயிகளும் வாங்கிய பயிர்கடன்களை எவ்வித நிபந்தனையும் இன்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்,முதல்வர் ச.ஜோசப் விஜய் இவ்விசயத்தில் நேரிடையாக தலையிட்டு அரசானை வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் எம்.எஸ்.கே.பாக்கியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அனைத்து விவசாயிகள் பொதுமக்கள்  இளைஞர்கள் மற்றும் தாய்மார்கள் கூட்டு முயற்சியால் சரித்திர சாதனை படைத்த தமிழக வெற்றி கழகத்திற்கு பாராட்டுக்கள். பல்வேறு நலத்திட்டங்களுக்கான முக்கியமான தேர்தல் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.தமிழ்நாட்டில் விவசாயிகளின் வாழ்வாதாரம் பொருளாதாரம் கடந்த ஆண்டுகளில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.பல்வேறு நிலைகளில் சிறு,குறு விவசாயிகள் வாங்கிய பயிர்கடன் மற்றும் அனைத்து விவசாயிகளும் வாங்கியிருக்கின்ற கூட்டுறவு கடன்களை  எவ்வித நிபந்தனையும் இன்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி பட்டியலை இணையத்தில் வெளியிட வேண்டும்.மேலும் விவசாயிகளுக்கான பிரத்யேக சட்ட திட்டங்களை நிதிநிலை தாக்கலுக்கு முன்பே விவசாய சங்க அமைப்புகளிடம் நேரடியாக கேட்டு  வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.அனைத்து கூட்டுறவு சங்கங்களில் நேரிடையாக பணியாளர்களை நியமிக்க வேண்டும்

கூட்டுறவுகளில் போதுமான உரங்கள் இருப்பு வைக்க வேண்டும்.காவேரி  வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்தை விரைவாக நிறைவேற்றிட வேண்டும். இவ்விசயங்களில்  தமிழ்நாட்டின் முதல்வர் ச.ஜோசப் விஜய் நேரடியாக தலையிட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button