தமிழகம்மாவட்டச் செய்திகள்

ராமநாதபுரத்தில் பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநர் பயிற்சிக்கான தேர்வு முகாம்:பங்கேற்று பயன்பெற கலெக்டர் அழைப்பு!!!

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜுத் சிங் காலோன் செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ராமநாதபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 18.05.2026 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் (PMNAM) பயிற்சிக்குரிய தேர்வு முகாம்-2026 நடைபெறவுள்ளது.

நிறுவனங்கள் (தமிழ்நாடு அரசு இதில் ஐந்திற்கும் மேற்பட்ட அரசு போக்குவரத்துக்கழகம், தமிழ்நாடு அரசு மின்சார வாரியம், வழுதூர் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிறுவனம், தமிழ்நாடு அரசு உப்பு உற்பத்தி கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு பனிமனை) மற்றும் ஐம்பதிற்கும் மேற்பட்ட முன்னனி தனியார் நிறுவனங்கள் இம்முகாமில் நேரடியாக பயிற்சியாளர்களை தொழிற்பழகுநர் பயிற்சிக்கு தேர்வு செய்யவுள்ளதால் இதில் 8ம் வகுப்பு 4 (Optional Trade),10ம் வகுப்பு 4 (Optional Trade), 12- (Optional Trade), ITI-யில் NCVT மற்றும் SCVT பயிற்சி முடித்தவர்கள் (Designated Trade) மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டம் பெற்றவர்கள் (Optional Trade) நேரடியாக கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button