தமிழகம்மாவட்டச் செய்திகள்

முக்கிய அறிவிப்பு:தேதி மாற்றம்!!!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜுத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் தாசில்தார் அலுவலகங்களிலும் 19.05.2026 முதல் 29.05.2026 வரை நடைபெறயிருந்த 1435-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் கணக்கு முடிப்பு (ஜமாபந்தி) அலுவல் காரணமாக 16.06.2026 முதல் 25.06.2026 வரை (சனி,ஞாயிறு, திங்கள் கிழமை நீங்கலாக) வருவாய் தாசில்தார் அலுவலகங்களில் நடைபெறும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

1435ம் பசலி ஆண்டு (2025-2026) கோரிக்கை தொடர்பான மனுக்களை ஜமாபந்தி அலுவலரிடம் நேரடியாகவும், மற்றும் https://cmhelpline.tnega.org/support/iipgcms/ShowHomePage.do அல்லது இ-சேவை மையங்கள் மூலமாகவும் 16.06.2026 முதல் 25.06.2026 வரை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் எனவும்,பதிவேற்றம் செய்யப்படும் மனுக்கள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு மனுதாரர்களுக்கு தீர்வு வழங்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button