தமிழகம்மாவட்டச் செய்திகள்

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் பொறுப்பேற்பு-துறை சார்ந்த அதிகாரிகள் வாழ்த்து!!!

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநராக அ.அருண் தம்புராஜ் ஐ.ஏ.எஸ் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் ச.ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றார். இந்நிலையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணிமாற்றம் செய்து உத்தரவிட்டார்.அதன் படி தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் தொடர்புத் துறை இயக்குநராக பணியாற்றி வந்த மரு.வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ் பணியிடம் மாற்றப்பட்டு மரு.அ.அருண் தம்புராஜ் ஐ.ஏ.எஸ் நேற்று மே.16 அன்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசின் புதிய செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டார்.இவர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தில் மருத்துவம் படித்து பட்டம் பெற்ற மருத்துவராவார்.2013ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி இந்திய அளவில் 6வது இடத்தை பெற்றார்.தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்று சாதனை படைத்தார்.தன்னுடைய ஐ.ஏ.எஸ் பணியில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றினார். இறுதியாக சேலம் மாவட்ட கலெக்டராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக பொறுப்பேற்றுள்ள மரு.அ.அருண் தம்புராஜ் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் செய்தித்துறை அதிகாரிகள்,பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button