தமிழகம்மாவட்டச் செய்திகள்
புதிய பேருந்து நிலையம் வராமல் செல்லும் பேருந்துகள்

கீழக்கரை சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முகைதீன் இப்ராகீம் கூறியதாவது:-
கீழக்கரை வழியாக செல்லும் பெரும்பாலான அரசு பேருந்துகள் குறிப்பாக தொலைதூர பேருந்துகள் கீழக்கரை புதிய பேருந்து நிலையம் வரை வராமல் முக்கு ரோடு திருப்பத்தில் திரும்பி செல்வதால் கீழக்கரை புதிய பேருந்து நிலையம் வரை இறங்க வேண்டிய பயணிகள் குறிப்பாக வயது முதிர்ந்த பயணிகள் பாதிக்கப்படுகின்றார்கள்.
இது சம்பந்தமாக பல புகார்கள் மாவட்ட கலெக்டர்,சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றாலும் எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொள்வதில்லை.
எனவே கீழக்கரை பொதுமக்கள் நலன் கருதி அனைத்து அரசு பேருந்துகளும் கீழக்கரை புதிய பேருந்து நிலையம் வரை செல்ல நடவடிக்கை மேற்கொள்வதோடு கீழக்கரை புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து நேர கண்காணிப்பாளரை நியமனம் செய்ய கேட்டு கொள்கின்றோம்.
இவ்வாறு அவர் கூறினார்.



