மத்திய அரசு உயர்த்திய உரங்களின் கூடுதல் விலையை திரும்ப பெற்றிட வேண்டும்-தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் கோரிக்கை!!!

தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் எம்.எஸ்.கே.பாக்கியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கச்சா எண்ணெய் விலையேற்றம் போர்பதற்றம் போன்ற அசாதாரண சூழல்களால் சமீபத்தில் மத்திய அரசு உரங்களின் விலையை மிக கூடுதலாக உயர்த்தியுள்ளது.
50 கிலோ பாக்டம்பாஸ் 20:20 ரூ.400
பொட்டாஷ் 1975 லிருந்து கூடுலாக 275 ரூ.2150
காம்ப்ளக்ஸ் 10:26:26 2200 ரூபாலிருந்து ரூ.250கூடுதலாக ரூ.2450
அம்மோனியம் சல்பேட் 1200 ரூபாலிருந்து ரூ.200 கூடுதலாக ரூ.1400 விற்பனை செய்ய விலை நிர்ணனயிக்கப்பட்டுள்ளது.இந்த விலை உயர்வு இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடன்சுமை கூடுதலாகும்.ஏற்கனவே பருவநிலை மாற்றம் வறட்சி பல்வேறு நோய் தாக்குதல் ஆட்கள் பற்றாக்குறை என விவசாயம் செய்ய இயலாத சூழலே இந்தியாவெங்கும் நிலவுகிறது. ஒருமுறம் மரபணு மாற்றப்பட்ட ரகங்களால் பாதிப்பு மறுபுறம் வேளாண் காப்பீட்டுத் திட்டங்கள் விவசாயிகளுக்கு ஏற்ற வகையில் இல்லை.பயிர் செய்ய பருவ காலங்களில் வேளாண் கடன்கள் கிடைப்பதில் பல்வேறு வகையான சிக்கல்களும் சிரமங்களும் இன்றளவும் தொடர்கின்றன.ஆகவே மத்திய அரசு விவசாயிகள் மீது கடன்சுமைகளை சுமத்தாமல் உரங்கள் மீதான மானியத்தை உயர்த்தி கூடுதலாக உயர்த்தப்பட்ட உரஙகளின் விலையேற்றத்தை திரும்ப பெற்றிட வேண்டும்.மாண்புமிகு பாரதப்பிரதமர் மோடி இவ்விசயத்தில் நேரிடையாக தலையிட்டு தீர்வு காண வேண்டும்.உரங்களின் விலையேற்றங்களால் மிகப்பபெரிய அளவில் மகசூல் பாதிக்கப்படுவது நிச்சயம்.ஆகவே உயர்த்தப்பட்ட உரங்களின் விலை யேற்றங்களை திரும்ப பெற்றிட தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



