மக்கள் நல பாதுகாப்பு கழகம் முதல்வர் ஜோசப் விஜயக்கு கோரிக்கை!!!

மக்கள் நல பாதுகாப்பு கழகம் செயலாளர் முகைதீன் இப்ராகீம் தமிழக முதல்வருக்கு அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தங்கள் கட்சி அமோக இடங்களில் வெற்றி பெற்று தற்போது தமிழக முதல்வராக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றீர்கள்.
தமிழக முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள தங்களை எங்கள் மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தங்கள் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நல்ல திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தை இந்தியாவின் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக கொண்டு வர அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
எங்கள் இந்த ஆலோசனையை தங்களின் மேலான கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.தற்போது பொதுமக்களுக்கு ஜனநாயக வலிமையாக இருக்கும் மாநில தகவல் அறியும் உரிமை ஆணையம் செயல்படுவது போல் மாநில மனுக்கள் ஆணையத்தை உருவாக்க கேட்டு கொள்கின்றோம்.
பொதுமக்கள் அரசு துறைகளுக்கு மனு அளித்தால் பல மனுக்களுக்கு எந்த வித தீர்வும் கிடைப்பதில்லை.இதனால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிப்பு அடைந்து வருகின்றார்கள்.
தாங்கள் அரசு மாநில மனுக்கள் ஆணையத்தை உருவாக்கும் பட்சத்தில் பொதுமக்கள் அரசு துறைகளுக்கு மனு செய்து நடவடிக்கை மேற்கொள்ளாத பட்சத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தற்போது இருக்கும் நடைமுறைபடி முதல் மேல் முறையீடு மனு, இந்த மேல் முறையீடு மனு மீதும் நடவடிக்கை மேற்கொள்ளாத பட்சத்தில் இரண்டாம் மேல் முறையீடு மனு மாநில மனுக்கள் ஆணையத்திற்கு புகார் மனு செய்து மனுதாரர்,மனுக்கு பதில் கூற வேண்டிய அரசு அதிகாரிகள் ஆகியோரை அழைத்து தீர்வு எட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் பட்சத்தில் அரசு அதிகாரிகளுக்கு பொறுப்பு உணர்வும்,பொதுமக்களுக்கு அரசு மீது நம்பிக்கையும் ஏற்படும் என்பது நிதர்சனம் உண்மை ஆகும் என்பதை தங்கள் கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கின்றோம.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.



