திருவாடானை அருகே உரிய அனுமதியின்றி மணல் கடத்திய வாகனம் பறிமுதல்:உதவி இயக்குநர் கனகராஜ் தகவல்!!!

✍️இணை ஆசிரியர்:அ.நூருல் அமீன்,8220145 723.
ராமநாதபுரம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் கனகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கலெக்டர் சிம்ரன்ஜுத் சிங் காலோன் உத்தரவின் படி உரிய அனுமதியின்றி கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டு வருபவர்களை கண்டறிந்து அவ்வப்போது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜுத் சிங் காலோன் உத்தரவின் பேரில்,ராமநாதபுரம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் கனகராஜ் தலைமையிலான அலுவலர்களால் இன்று திருவாடானை வட்டம் பெரிய கீரமங்கலம் பகுதியில் கனிம திருட்டு தொடர்பாக வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த TN-65-BC-3234 என்ற பதிவெண் கொண்ட டாரஸ் வாகனத்தைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது உரிய நடைச்சீட்டு இல்லாமல் சுமார் 6 யூனிட் அளவுள்ள எம்.சாண்ட் கனிமம் ஏற்றி வரப்பட்டது கண்டறியப்பட்டு அந்த வாகனமானது திருவாடானை போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைக்கப்பட்டு,வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீது கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் (அபிவிருத்தி மற்றும் முறைப்படுத்துதல்) சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



