தமிழகம்மாவட்டச் செய்திகள்

புதிய மின்மாற்றி துவக்க விழா!!!

ராமநாதபுரம் அருகே பழங்குளம் கிராமத்தில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு துவக்க விழா நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் இளமனூர் ஊராட்சிக்குட்பட்ட பழங்குளம் கிராமத்தில் புதிய மாற்றி துவக்க விழா நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.

ராமநாதபுரம் அருகே உள்ளது இளமனூர் ஊராட்சிக்குட்பட்டது பழங்குளம் கிராமம்.இந்த கிராமத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் குறைந்த மின்னழுத்த குறைபாடு காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.குறிப்பாக இரவு நேரங்களில் குறைந்த மின்னழுத்த குறைபாடு காரணமாக மின்சாதனங்கள் இயக்க முடியாமல் கிராம மக்கள் அவதிக்குள்ளாகினர்.இது குறித்து மின்வாரியத்திற்கு பழங்குளம் கிராமத்தில் மின் மாற்றி அமைத்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கணேசன் பழங்குளம் கிராமத்திற்கு புதிய மின்மாற்றி அமைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து ராமநாதபுரம் மின்வாரிய நகர் உதவி செயற்பொறியாளர் சோமசுந்தரம் மற்றும் தேவிபட்டினம் உதவி பொறியாளர் முத்துக்குமார் ஆகியோர் பழங்குளம் கிராமத்தில் புதிய மின்மாற்றி அமைத்து கொடுத்தனர். இதன் தொடக்க விழாவில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கணேசன் கலந்துகொண்டு மின் விநியோகத்தை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் கிராம தலைவர் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் கோபால் உள்ளிட்ட கிராம பொதுமக்கள்,மின்வாரிய ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button