தமிழகம்மாவட்டச் செய்திகள்

தேவிபட்டினம் ஊராட்சியில் தூய்மைப்பணிகள்:கலெக்டர் முன்னிலையில் அமைச்சர் ஆய்வு!!!

ராமநாதபுரம் மாவட்டம்,ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் தேவிபட்டினம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வே.க.ராஜுவ்,மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜுத் சிங் காலோன் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தேவிபட்டினம் கடற்கரை மற்றும் நவபாஷான பகுதிகளில் தூய்மைப்பணிகளை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்…

இந்த ஆய்வின்போது அமைச்சர் தேவிபட்டினம் ஊராட்சியில் கடற்கரை மற்றும் நவபாஷானம் பகுதியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்வதை பார்வையிட்டதுடன்,கடற்கரை அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலிருந்து திட மற்றும் திரவ கழிவுகள் கடலில் கலக்காத வகையில் கண்காணித்து தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுதி,அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் இந்த கடற்கரைப் பகுதி நாம் வசிக்கும் பகுதியாகும் இதை தூய்மையாக வைத்துக் கொள்வதன் மூலம் அனைவரும் ஆரோக்கியமுடன் இருந்திடலாம்.எனவே அலுவலர்கள் பொதுமக்களிடம் அவ்வப்பொழுது விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்த கடற்கரை பகுதியை தூய்மையாக வைத்துக் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்றார்.

இந்த ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம்,ஊராட்சி உதவி இயக்குநர்கள் பத்மநாபன்,கணபதி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button