அமைச்சரிடம் மீனவ சங்க பிரதிநிதிகள் கோரிக்கை!!!

ராமநாதபுரத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வே.க.ராஜீவை,மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜுத் சிங் காலோன்,போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் ஐ.பி.எஸ் ஆகியோர்களது முன்னிலையில்,ராமேசுவரம் மற்றும் பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவ சங்க பிரதிநிதிகள் சந்தித்து,ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 12 மீனவர்களை மீட்டுத்தர கோரிக்கை வைத்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் கடந்த 90 நாட்களாக உடல் ரீதியாகவும்,மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மிகுந்த மன வேதனையில் இருந்து வருகின்றனர்.எனவே கைது செய்யப்பட்ட மீனவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு பிடிபட்ட மீனவர்களையும்,பிடிபட்ட மீன்பிடி படகுகளையும் மீட்டுத்தர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அமைச்சர் இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும்,மேலும் மீனவ சங்க பிரதிநிதிகளை ஓரிரு நாட்களில் மீன்வளத்துறை அமைச்சர் மூலமாக தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணப்படும் என மீனவ சங்க பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.



