தமிழகம்மாவட்டச் செய்திகள்

கமுதி காமாட்சியம்மன் கோயில் திருவிழா:5-ம் நாள் விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி காமாட்சியம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழா முன்னிட்டு 5 ஆம் நாள் விழாவில் சனிக்கிழமை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கௌரவ செட்டியார்கள் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட காமாட்சியம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழா கடந்த மே 19ஆம் தேதி காப்பு கட்டுதல், கும்பம் எடுத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்று வருகிறது. பெண்கள் கும்மி பாடல்கள் பாடி அம்மனை வழிபட்டு வருகின்றனர். இந்தநிலையில் ஐந்தாம் நாள் நிகழ்வாக அம்மனுக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் உத்சவர் காமாட்சியம்மன் சிறப்பு அலங்காரத்தில் உள்பிரகாரத்தில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. 25 ஆம் தேதி திருவிளக்கு பூஜை, 26 ஆம் தேதி பொங்கல் வைத்தல், 27 ஆம் தேதி பால்குடம் ஊர்வலம், பூச்சொரிதல் விழா, 28ஆம் தேதி முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை முறைகார்கள்
கௌரவ செட்டியார்கள் உறவின்முறையினர், இளைஞர்கள் செய்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button