தேவிபட்டினம் மீன் மார்க்கெட் பகுதியில் அமைச்சர் ஆய்வு!!!

ராமநாதபுரம் மாவட்டம்,தேவிபட்டிணம் ஊராட்சியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வே.க.ராஜீவ் தூய்மைப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தேவிபட்டினம் ஊராட்சியில் உள்ள மீன் விற்பனை நிலையத்தை பார்வையிட்டு,அதிக அளவு பொதுமக்கள் வந்து செல்வதை கருத்தில் கொண்டு அருகாமையில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான வளாகத்தில் கூடுதலாக கடைகள் அமைத்து மீன் விற்பனை மேற்கொள்ள உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் ஊராட்சி பகுதியில் குப்பைகள் சேராமல் தூய்மைப்படுத்தி பாதுகாத்திடவும் அதற்கு பொதுமக்களும்,வியாபாரிகளும் ஒத்துழைப்பு கொடுத்து அரசாங்கத்தால் சுத்தம் செய்து,பாதுகாக்கும் பகுதிகளை பொதுமக்களாகிய நீங்களும் பாதுகாத்து பயன்படுத்திட வேண்டுமென சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வே.க.ராஜீவ் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகர்,உதவி திட்ட அலுவலர் தங்கப்பாண்டி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



