தமிழகம்மாவட்டச் செய்திகள்

அமைச்சர் அட்வைஸ்!!!

தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் வே.க.ராஜீவ் இளைஞர்கள் போதை பழக்கங்களிலிருந்து விலகி கல்வி மற்றும் இதர முன்னேற்ற பாதையில் பயணிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விசில் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மரு.வே.க.ராஜீவிற்கு தமிழக அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சராக பதவி வழங்கப்பட்ட பின்பு முதன் முறையாக ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகை வந்தார்.ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜுத் சிங் காலோன்,போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் ஐ.பி.எஸ் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர்,தமிழக வெற்றிக்கழக தலைவர் ஜோசப் விஜய் எனக்கு இந்த மிக முக்கியமான பொறூப்பை கொடுத்து,மக்கள் பணியாற்ற வாய்ப்பு வழங்கியுள்ளார்.அந்த நம்பிக்கைக்கு ஏற்ப மக்கள் நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன்.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி மணல் கடத்தல் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.அவ்வாறு மணல் கடத்தலில் ஈடுபவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்,இயற்கை வளங்களை சேதப்படுத்தும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.பொதுமக்களின் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படுத்தும் விதமாக இருக்கும் சாயப்பட்டறைகளிலிருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவு நீர் முறையாக சுத்திகரிக்கப்பட்ட பின்னரே வெளியேற்றப்பட வேண்டும் விதிகளை மீறி இயங்கும் நிறுவனங்கள் சிபாரிசுகள் மூலம் தப்ப முடியாது.எவ்வித சமரசமுமின்றி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.ராமநாதபுரம்,ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு தினமும் ஏராளமான சுற்றுப்பயணிகள் வந்து செல்கின்றனர்.எனவே அந்தப்பகுதிகளை தூய்மையாகவும்,குப்பைகள் தேங்கா வண்ணம் பராமரிக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் அச்செயலை கைவிட்டு மாற்று தொழிலுக்கு செல்ல வேண்டும் இல்லையென்றால் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் இளைஞர்கள் போதை பழக்கங்களிலிருந்து விலகி கல்வி மற்றும் இதர முன்னேற்ற பாதைகளில் பயணிக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு படையெடுப்பதை தவிர்க்க உள்ளூரிலேயே அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க போலீசாருக்கும்,அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை முழுமையாக தீர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக வெற்றிக்கழக ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன் உட்பட நிர்வாகிகள் தொண்டர்கள் உடன் இருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button