டூப்ளிகேட் நிருபருக்கு தொட்டுக்க சைடிஸ்ட் பாரம்பரிய மிக்க நாளிதழா?

சென்னையிலிருந்து அதிரடி செய்தி புலனாய்வு இதழின் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் டாக்டர் சிறியூர் செ.செல்லப்பாண்டி பாண்டிச்சேரி நமது முரசு நாளிதழ் உரிமையாளருக்கு பரபரப்பான கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார்.
அந்த கோரிக்கை பின்வருமாறு:-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த செய்யது அபுதாஹிர் சென்னையில் இருந்து வெளிவரும் பதிவு எண் இல்லாத வணக்கம் தமிழகம் என்ற போலி பத்திரிக்கையிலும்,பாண்டிச்சேரியிலிருந்து இந்திய பத்திரிக்கை பதிவாளர் ஜெனரலில் முறைப்படி பதிவு பெற்று வெளிவரும் நமது முரசு என்ற அசல் பத்திரிக்கையிலும் ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு வரை வணக்கம் தமிழகம் என்ற போலி பத்திரிக்கையில் மட்டுமே செய்தியாளராக பணியாற்றி வந்தார்.நாங்கள் கலெக்டர் மற்றும் பிஆர்ஓவுக்கு கொடுத்த புகாரின் அடிப்படையில் வணக்கம் தமிழகம் என்ற போலி பத்திரிக்கைக்கு வழங்கப்பட்ட இலவச பேருந்து பயண அட்டை திரும்ப பெறப்பட்ட பின் அவசரம்,அவசரமாக பிரபல நாளிதழில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மூத்த பத்திரிக்கையாளர் ஒருவரை அணுகி பாண்டிச்சேரியிலிருந்து வெளிவரும் நமது முரசு என்ற பத்திரிக்கையில் ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளராக பணியில் சேர்ந்தார்.இந்நிலையில் போலி பத்திரிக்கையாக இருந்தாலும் இவ்வளவு நாள் ஏகத்துக்கும் பலரை செய்தி என்கிற பெயரில் மிரட்டி பணம் வசூலித்து வயிறு வளர்த்த நிறுவனம் என்பதால் விட மனமில்லாமல் தற்போது வரை வணக்கம் தமிழகம் என்ற போலி பத்திரிக்கையிலும் பணியில் இருந்து வருகிறார்.மேலும் தற்போது உரிய அங்கீகாரத்தில் இருக்கும் நமது முரசு நாளிதழை விட்டு டூப்ளிகேட் பத்திரிகையான வணக்கம் தமிழகம் நாளிதழுக்கு தனது சொந்த ஊரான ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழாவிற்கு 2 பக்க கலர் விளம்பரம் வாங்கி வெளியிட்டுள்ளார்.




இதிலிருந்தே அனைவருக்கும் புரியும் அவரும் டூப்ளிகேட் நிருபர்தான் என்று.அரசு சலுகைகளை பெறுவதற்காக மட்டுமே நமது முரசு நாளிதழில் பணியில் சேர்ந்த இந்த டூப்ளிகேட் நிருபரால் பிஆர்ஓவிடம் பேசி தகுதி பெற்ற நமது முரசு நாளிதழுக்கு கால் சென்டிமீட்டர் அரசு விளம்பரம் கூட வாங்க முடியாது. காரணம் பிஆர்ஓ மீதும் டூப்ளிகேட் நிருபர்,தனது டூப்ளிகேட் பத்திரிக்கையான வணக்கம் தமிழகம் மூலம் வாயில் வந்ததை வாந்தி எடுத்து சண்டையிட்டுள்ளார்.மேலும் இதர பயன்பாட்டிற்கு டூப்ளிகேட் பத்திரிக்கையான வணக்கம் தமிழகம் நாளிதழையே பயன்படுத்தி வருகிறார்.தற்போது சரக்கிற்கு தொட்டுக்க ஊறுகாய் போல போலி வணக்கம் தமிழகத்தை சரக்காகவும்,ஒரிஜினலான நமது முரசு நாளிதழை ஊறுகாயாகவும் பயன்படுத்தி வருகிறார்.பெருமைக்கு வெளியில் அரசு விளம்பர அனுமதி (DIPR) பெற்ற பத்திரிக்கையான நமது முரசு நாளிதழின் நிருபர் என பீற்றிகீ கொள்ளும் இவர் பெரும்பாலான இடங்களில் மிரட்டி வசூல் செய்ய டூப்ளிகேட் வணக்கம் தமிழகம் நாளிதழையே பயன்படுத்துகிறார் எனவும் பரவலாக பேசப்படுகிறது.காரணம் நமது முரசு நாளிதழ் பாரம்பரியமிக்க நாளிதழ் என்பதால் இவர் அனுப்பும் செய்திகளை பல கட்ட விசாரணைக்கு பின்னரே வெளியிடுவார்கள்.ஆனால் டூப்ளிகேட் வணக்கம் தமிழகத்தில் செய்தி என்ற பெயரில் அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை வாந்தியாக எடுத்தால் கூட அது அப்படியே வெளிவரும்.நமது முரசு என்ற பாரம்பரியமிக்க நாளிதழ் பெயரை பயன்படுத்துவது தன்னை ஒரிஜினல் என நிரூபிப்பதற்காகத்தான் என நிருபர்கள் வட்டாரத்தில் சூடம் ஏற்றி சத்தியம் செய்கின்றனர்.எனவே நமது முரசு நாளிதழ் நிர்வாகம் சுதாரித்து கொண்டு செய்யது அபுதாஹிரை பணிநீக்கம் செய்ய வேண்டும்.இல்லையென்றால் டூப்ளிகேட் வணக்கம் தமிழகத்தை கைவிட நிர்பந்திக்க வேண்டும் இது இரண்டில் ஒன்று நடக்காவிட்டால் “பன்றியோடு சேர்ந்த பசுவும் எதையோ தின்னுமாம்” என்ற பழமொழிக்கேற்ப பராம்பரியமிக்க நாளிதழான நமது முரசின் பெயரும் கெட்டு போய் விடும் என்பதே யதார்த்தமான உண்மை.மேலும் டூப்ளிகேட் வணக்கம் தமிழகம் பத்திரிக்கையில் ஏர்வாடி முன்னாள் ஊராட்சி தலைவரை பற்றி அவதூறாக செய்யது அபுதாஹிர் எடுத்த வாந்தியை அப்படியே வெளியிட்டது தொடர்பாகவும் செய்யது அப்பாஸ் என்பவர் புகார் அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.



