தமிழகம்மாவட்டச் செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருது:விண்ணப்பிக்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அழைப்பு!!!

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-

சமூகநலத்துறையின் மூலம் 2026-ஆம் ஆண்டிற்கான சுதந்திர தினவிழா கல்பனா சாவ்லா தைரியம் மற்றும் துணிச்சலான செயல் புரிந்த நபர் விருதுக்கு தகுதியான தனிநபர்களிடமிருந்து கருத்துருக்கள் வருகிற ஜீன் 19-ஆம் தேதிக்குள் https://awards.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விருது வேண்டி விண்ணப்பிப்பவர்கள் கீழ்க்கண்ட விதிமுறைகளை பூர்த்தி செய்பவராக இருத்திடல் வேண்டும்.

1.தமிழகத்தில் பிறந்தவராகவும் 18 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும்.

2.ஒரு பக்கம் அந்த நபரைப் பற்றியும், துணிச்சல் மற்றும் துணிச்சலான முயற்சிகளை பற்றியும் தமிழ் (மருதம்) மற்றும் ஆங்கிலத்தில் (Verdana) Font -ல் எழுத வேண்டும்.

3.அந்த நபரின் சுய விவரம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2.

4.படிவம் முழுமையாக நிரப்பப்பட வேண்டும்.

5.விண்ணப்பதாரரின் சுயசரிதை தரவு.

தாங்கள் செய்த தைரியம் மற்றும் துணிச்சலான செயல் குறித்த உரிய விவரங்கள் நிழற்படங்கள், விருது பெற்றிருந்தால் அது பற்றிய விவரங்கள், பிறந்த தேதி, கல்வித்தகுதி போன்ற முழு விபரங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் ஜீன் 19ம் தேதிக்குள் கருத்துருவினை சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button