தமிழகம்மாவட்டச் செய்திகள்

புதிய கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்:அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்!!!

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர்ப் பற்றாக்குறை நிலவும் நகர்ப் பகுதிகளுக்கும்,ஊரக குடியிருப்புகளுக்கும் காவிரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் அரசாணை நிலை எண். 176 / நகராட்சி நிர்வாகம் மற்றம் குடிநீர் வழங்கல் துறை / நாள். 14.12.2022 மற்றும் ஆணை எண்.52 / நகராட்சி நிர்வாகம் மற்றம் குடிநீர் துறை / நாள்.02.05.2023-ல் ரூ2819.00, கோடிக்கு வழங்கப்பட்டது. இத்திட்டம் ஜல் ஜீவன் மிஷன் மற்றும் அம்ரூத் திட்டங்களின் நிதியின் கீழ் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 11 ஒன்றியத்தில் உள்ள 2306 ஊரகக் குடியிருப்புகளும், பயன்பெற உள்ளன. இத்திட்டத்திற்கான இடைக்கால (2039) மக்கட்தொகை 15.77 இலட்சம் மக்களுக்கு 67.75 மில்லியன் லிட்டர், உச்சகால (2054) மக்கட்தொகை 18.62 இலட்சம் மக்களுக்கு 91.31 மில்லியன் லிட்டர் வீதம் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஊரகப்பகுதியில் நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு 55 லிட்டர் குடிநீர், பேரூராட்சி பகுதிகளுக்கு நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு 90 லிட்டர் குடிநீர் மற்றும் நகராட்சி பகுதிகளுக்கு நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தில் கரூர் மாவட்டம் நஞ்சைப்புகளர் என்னும் இடத்தில் காவிரி ஆற்றில் ஒரு உட்கொள்ளும் கிணறு (Intake Well) அமைக்கப்பட்டுள்ளது.இங்கு பெறப்படும் இயல்பு நீர் 50.8 கி.மீ க்கு அப்பால் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் அமைக்கப்பெற்றுள்ள 135 மில்லியன் லிட்டர் கொள்ளளவு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தற்போது 65 மில்லியன் லிட்டர், சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இரு பிரிவுகளாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு, 36 மில்லியன் லிட்டரும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு 29 மில்லியன் லிட்டரும், நீரேற்றக் குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்திற்கான குடிநீர்த் திட்ட அமைப்பு (அமைப்பு 1):-

இத்திட்டத்தின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த இடைக்கால (2039) மக்கட்தொகை 15.77 இலட்சம் மக்களுக்கு 67.75 மில்லியன் லிட்டர், உச்சகால (2054) மக்கட்தொகை 18.62 இலட்சம் மக்களுக்கு 91.31 மில்லியன் லிட்டர் வீதம் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.அரவக்குறிச்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து 34.85 கி.மீ நீரேற்றக் குழாய்கள் மூலம் குருணிக்குளத்துப்பட்டி அமையக்கப்பட்டுள்ள 32.90 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிக்கும், பின்னர் 100.50 கி.மீ நீரேற்றக் குழாய்கள் மூலம் தும்பைபட்டியில் அமையப்பெற்றுள்ள 36.25 இலட்சம் லிட்டர் சமநிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.இந்த தும்பைபட்டி தலைமை சமநிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்துவரும் நீர், புவியீர்ப்பு விசை மூலம் இராமநாதபுரம் மறிச்சுக்கட்டி வரை 60 கி.மீ பிரதான இரும்பு குழாய் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. மேலும், நீரேற்று குழாய்கள் 3728.12கி.மீ. தூரத்திற்கு பதிக்கப்பட்டு, 96 மண்டல சமநிலை நீர்த்தேக்கங்களில்(ZBRs) 92 முடிக்கப்பெற்று 4 மண்டல சமநிலைநீர்த்தேக்கங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது பிரிவு நீரேற்று குழாய்கள் 43 கி.மீ. துரத்திற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. ZBR களில் இருந்து புதிதாகக் கட்டப்பட்டு வரும் 816 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 1708 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கும் குடிநீர் ஏற்றப்பட உள்ளது. பின்னர், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளிலிருந்து ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மற்றும் புதிதாக அமைக்கப்பட உள்ள பகிர்மானக் குழாய்கள் மூலம் பயனாளிகளுக்குக் குடிநீர் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் நகரப்பகுதிகளுக்கு 55068 புதிய வீட்டிணைப்புகள் வழங்கப்பட உள்ளது. சோதனை ஓட்டத்தின் கீழ் தற்போது 19 மண்டல மேல்நிலை தொட்டிகளுக்கு நீரேற்றம் செய்யப்பட்டு இதன் மூலம் 59 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டது.இத்திட்டம் 4 சிப்பங்களாகப் பிரிக்கப்பட்டு, மூன்று சிப்பங்களுக்கு 31.03.2023 அன்றும், 1 சிப்பத்திற்கு 08.04.2023 அன்றும் பணிஉத்தரவு வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தினை 08/2026-க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 06.06.2026 அன்று மாவட்ட கலெக்டரின் தலைமையில் நடந்த பணிகள் ஆய்வுக் கூட்டத்தில் புதிய கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை விரைவு படுத்தி குறித்த காலத்திற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளருக்கு மாவட்ட கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button