ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு!!!

ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டதை பார்வையிட்டார்.அதனைத் தொடர்ந்து மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு விடுதி கட்டடம் கட்டுவதற்கான தேர்வு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டு,பொதுப்பணிதுறை மூலம் பணிகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார்.அதனைத் தொடர்ந்து மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒவ்வொரு பிரிவுக்கும் சென்று பார்வையிட்டு, மருத்துவ கட்டமைப்பு மற்றும் நாள்தோறும் சிகிச்சை பெற வருவோர்களுக்கும்,உள்நோயாளி சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் தேவையான உட்கட்டமைப்பு வசதி தேவைக் கேற்ப மேம்படுத்துவது குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் மாவட்ட கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பேராசிரியர் மரு.அமுதாராணி,பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குருதிவேல் மாறன்,மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்



