தமிழகம்மாவட்டச் செய்திகள்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் பல்வேறு கடனுதவிகள்:ராமநாதபுரம் கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன் தகவல்!!!

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன்,சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன்,கைவினை கலைஞர்களுக்கு கடன்,கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வெவ்வேறு வருமானம் சார்ந்த பயனாளிகளுக்கு கடன் (ம) வட்டி விகிதங்களின் மாறுபட்ட அளவுடன் கூடிய திட்டம்1-ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம /நகர்புறமாயின் ரூ.3,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.மற்றும், திட்டம் -2 இன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம /நகர்புறமாயின் ரூ.8,00,000/-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். (திட்டம் 1ன் கீழ் நன்மைகளை பெற முடியாத நபர்கள்).திட்டம் – 1இன் கீழ் தனி நபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.20,00,000/-மும், திட்டம் 2-இன் கீழ் ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.30,00,000/- கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5% பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிக பட்ச கடனாக ரூ.10,00,000/- கடன் வழங்கப்படுகிறது.சுய உதவிக் குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000/-ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2 -இன் கீழ் ஆண்களுக்கு 10% பெண்களுக்கு 8% வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000/-கடன் வழங்கப்படுகிறது. மேலும் சிறுபான்மையின மாணவ மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை / முதுகலை தொழிற்கல்வி /தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகப்பட்சமாக திட்டம் 1இன் கீழ் ரூ.20,00,000/-வரையில் 3% வட்டி விகிதத்திலும் திட்டம் 2இன் கீழ் மாணவர்களுக்கு 8% மாணவியர்களுக்கு 5% வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000/- வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு விராசாத்கடன் (கைவினைகலைஞர் கடன் திட்டம்) கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டிவிகிதத்தில் மூலப்பொருட்களான உபகரணங்கள் / கருவிகள் / இயந்திரங்கள் வாங்குவதற்கு இக்கடன் வழங்கப்படுகிறது. எனவே சிறுபான்மையின மக்கள் இத்திட்டத்தை அதிக அளவில் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இம்மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட/மத்திய கூட்டுறவு வங்கி அதன் கிளைகள் (அ) நகர கூட்டுறவு வங்கி (அ) தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய அலுவலகங்களில் பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் விண்ணப்பங்களுடன் இணைத்து சமர்பிக்க வேண்டிய போதிய ஆவணங்கள்:-

தனிநபர் கடன்திட்டம், சுயஉதவிகுழுக்கடன், விராசத் (கைவினை கலைஞர் கடன் திட்டம்)

1.சிறுபான்மையினர் மதச்சான்றிதழ்.

2.சாதிசான்றிதழ்.

3.வருமானசான்றிதழ்.

4.உணவுபங்கீடுஅட்டை அல்லது இருப்பிட சான்றிதழ்.

5.ஆதார் அட்டை.

6.திட்ட அறிக்கை (கடன் தொகை ரூ.5,00,000/- க்கு மேல் இருப்பின்)

7.வங்கிகள் கோரும் தேவையான ஆவணங்கள்.

கல்விக்கடன்:-

1.சிறுபான்மையினர் மதச்சான்றிதழ் / சாதிச்சான்றிதழ் / வருமான சான்றிதழ் நகல் / இருப்பிடசான்றிதழ் நகல்.

2.குடும்பஅட்டை/ வாழ்விடசான்று.

3.ஆதார் நகல்.

4.பள்ளிமாற்று சான்றிதழ் நகல்.

5.உண்மைச்சான்றிதழ் (Bonafide Certificate) அசல்.

6.கல்விக்கட்டணங்கள் செலுத்திய இரசீது அசல் (Original).

7.மதிப்பெண் சான்றிதழ் நகல்.

8.வங்கிகோரும் இதர ஆவணங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button