ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்:கலெக்டர் தகவல்!!!

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-
தமிழக அரசின் ஆணைக்கிணங்க மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக ஜூன் 2026 மாதத்தில் 13.06.2026 சனிக்கிழமை அன்று கீழ்க்காணும் கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்பட உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம்,ராமநாதபுரம் வட்டம் தேவிப்பட்டிணம் உள்வட்டம் குலசேகரக்கால் (நியாயவிலைக்கடை) / ராமேசுவரம் வட்டம் ராமேசுவரம் உள்வட்டம் – பாம்பன் (ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம்) /திருவாடானை வட்டம் தொண்டி உள்வட்டம் -கீழ்க்குடி மஞ்சூர் (நியாயவிலைக்கடை)/பரமக்குடி வட்டம் மஞ்சூர் உள்வட்டம் (நியாயவிலைக்கடை)/முதுகுளத்தூர் வட்டம் காக்கூர் உள்வட்டம் காக்கூர் (நியாயவிலைக்கடை) /கடலாடி வட்டம் சிக்கல் உள்வட்டம் பேய்க்குளம் (நியாயவிலைக்கடை) / கமுதி வட்டம் கமுதி கிழக்கு உள்வட்டம் செங்கப்படை (நியாயவிலைக்கடை) / கீழக்கரை வட்டம் – திருப்புல்லாணி உள்வட்டம் மேதலோடை (நியாயவிலைக்கடை)/ ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் ஆர்.எஸ்.மங்கலம் உள்வட்டம் – பகவதிமங்கலம் (நியாயவிலைக் கடை) ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு/ மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் நியாயவிலைக்கடைகளில் பொருள் பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொது விநியோகக்கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 09 வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் எதிர்வரும் 13.06.2026 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ள குறைதீர் முகாமில் மனுக்களை அளித்து இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



