தமிழகம்மாவட்டச் செய்திகள்

ராமநாதபுரத்தில் மாநில அளவில் இணைய வழி வழிகாட்டுதல் பயிற்சி:கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன் பங்கேற்பு!!!

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் உயர்கல்வி – மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட கட்டுப்பாட்டு அறை உறுப்பினர்கள் / அலுவலர்களுக்கான மாநில அளவில் இணையவழி வழிகாட்டுதல் பயிற்சி நடைபெற்றதை மாவட்ட கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன் பங்கேற்று பார்வையிட்டார்.

மாவட்ட கலெக்டர் பயிற்சியை பார்வையிட்டு குழு உறுப்பினர்களிடம் தெரிவிக்கையில்:-

நமது மாவட்டத்தில் 2026-27 கல்வியாண்டில் மாணவர்கள் 100% உயர்கல்வியில் சேர்வதை உறுதிபடுத்த வேண்டுமென மாவட்ட கட்டுப்பாட்டு அறை உறுப்பினர்களை கேட்டுக் கொண்டதுடன், அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவரையும் உயிர்கல்வியில் சேர்வதை உறுதி செய்ய வேண்டுமென அறிவுறுத்தினார்.

இன்று (11.06.2026) அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு (SMC) தலைவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த மீளாய்வு கூட்டம் நடத்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் உள்ள அலுவலர்களை நேரிலோ அல்லது கட்டுப்பாட்டு அறையில் செயல்பட்டு வரும் 04567-228016, 04567-228021 ஆகிய தொலைபேசி எண்களிலும், 98948 25860, 99433 35196 ஆகிய வாட்ஸ்-ஆப் எண்களிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்தார்.

மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களும் 100% உயர்கல்வியில் சேருவதை உறுதிசெய்திடும் வகையில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்வதாக மாவட்ட கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இணைய வழியில் நடைபெற்ற பயிற்சியில் விருதுநகர், கோவை, கடலூர், கன்னியாகுமரி மற்றும் சேலம் மாவட்ட கலெக்டர்கள் தங்கள் மாவட்டத்தில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க செயல்படுத்தி வரும் பல்வேறு முன்னெடுப்புகளை விளக்கி கூறினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button