முதுகுளத்தூர் தொகுதியில் மும்முனை போட்டி-பின்னுக்கு செல்கிறாரா? ஆளுங்கட்சி மந்திரி!!!

இணை ஆசிரியர்:அ.நூருல் அமீன்,8220145 723.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் சிட்டிங் மந்திரி ராஜகண்ணப்பன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பிலும், முன்னாள் எம்எல்ஏ மலேசியா பாண்டியன் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பிலும் டாக்டர் ராம்குமார் பாண்டியன் அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பிலும் போட்டியிடுவதால் மும்முனை போட்டி நிலவுகிறது.
இதில் முன்னாள் எம்எல்ஏ மலேசியா பாண்டியன், டாக்டர் ராம்குமார் பாண்டியன் ஆகியோர் மண்ணின் மைந்தர்களாக இருப்பதாலும்,மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் களம் காணும் ஆளுங்கட்சி மந்திரி ராஜகண்ணப்பன் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதாலும் மூவரில் ராஜகண்ணப்பன் தவிர்த்து இருவருக்கு மட்டுமே கள நிலவரம் சாதகமாக உள்ளதாகவும் பொதுமக்களிடையே பரவலாக பேசப்படுகிறது.மேலும் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மந்திரி பொறுப்பேற்ற கண்ணப்பன் தொகுதி பக்கமே வராமல் தனது ஆதரவாளர்களை வைத்து அரசியல் செய்து வந்ததும் அவருக்கு கூடுதல் மைனஸாக அமைந்துள்ளது.இந்நிலையில் கடந்த முறை வென்று தொகுதிக்கு எதுவும் செய்யாமல் இம்முறையும் ஓட்டு கேட்டு வருவது தொகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
கிடைக்கின்ற மேடைகளிலெல்லாம் தன்னிறைவு பெற்ற முதுகுளத்தூர் தொகுதி என வாய்ச்சவடால் விடும் மந்திரி கண்ணப்பன் கடந்த 5 வருட திமுக ஆட்சியில் தனக்குள் தேக்கி வைத்திருப்பது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி அதன் மூலம் வரும் எதிர்மறை விமர்சனங்களைத்தான் என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.கடந்த முறை முதுகுளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற மந்திரி கண்ணப்பன் அந்த தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் செய்து காட்டியது என்பது சொற்ப அளவில் தான் உள்ளதாம்.எனவே இம்முறை ஆளுங்கட்சி மந்திரி கண்ணப்பனுக்கு ஓட்டு விழுவதும் சொற்ப அளவில்தான் எனவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து விட்டு மூத்த அரசியல்வாதி எனவும், வயது மூப்பின் காரணமாக பேசுகிறார் எனவும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து சப்பைக்கட்டு கட்டி வருகின்றனராம்.
முதுகுளத்தூர் தொகுதியில் நடப்பது தான் என்ன? யாருக்கு களம் சாதகமாக உள்ளது என்பது போன்ற பல்வேறு கேள்விகளுடன் நமது நிருபர்கள் குழு முதுகுளத்தூரை மையம் கொண்டுள்ளனர்.தொடர் தீவிர அலசலுக்கு பின்னர் இது குறித்த முழு விபரங்கள் ஆதாரத்துடன் “காலை அஞ்சல்” நாளைய நாளிதழில் வெளியாகும்…..
தொடரும்…



