அரசியல்தமிழகம்

திருப்புல்லாணி யூனியன் பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஓட்டு வேட்டை:வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு!!!

ராமநாதபுரம் மாவட்டம்,ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் GBS.K.நாகேந்திரன் தீவிர ஓட்டு வேட்டை நடத்தினார்.

அதன்படி திருப்புல்லாணி யூனியனுக்குட்பட்ட ரெகுநாதபுரம்,நயினா மரைக்கான்,பத்திராதரவை,வண்ணாங்குண்டு,சின்னாண்டி வலசை உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரிக்க சென்ற தேசிய ஜனநாயக கூட்டணி ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் GBS.K.நாகேந்திரனுக்கு அப்பகுதி மக்கள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பளித்தது ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி நிச்சயம் என்பதை உறுதி செய்யும் வண்ணம் இருந்தது.

இந்நிகழ்வின் போது அதிமுக மருத்துவ அணி துணைச்செயலாளர்,முன்னாள் அமைச்சர் டாக்டர் மு.மணிகண்டன்,அ.ம.மு.க நிர்வாகி JRB.மணிகண்டன் உட்பட தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த மாநில,மாவட்ட,நகர,ஒன்றிய,பேரூர்,கிளை நிர்வாகிகள்,தொண்டர்கள்,சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

முன்னதாக முதல் கட்ட பிரச்சாரத்தை தனது சொந்த ஊரான ரெகுநாதபுரத்தில் இருந்து தொடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி பா.ஜ.க வேட்பாளர் GBS.K.நாகேந்திரனுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக்கழக நிர்வாகிகள் சார்பில் ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டு வெற்றிவேல் பரிசாக வழங்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button