தமிழகம்மாவட்டச் செய்திகள்

பனைக்குளம் அருகே வாக்குப்பதிவு நிறுத்தம்!!!

ராமநாதபுரம் மாவட்டம்,மண்டபம் யூனியன் பனைக்குளம் அடுத்த சோகையன் தோப்பு கிராம மக்களை ஒருமையில் பேசிய தேவிபட்டினம் இன்ஸ்பெக்டர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வாக்களிப்பதை நிறுத்தி விட்டு கிராம மக்கள் சாலையில் அமர்ந்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம்,மண்டபம் யூனியன் பனைக்குளம் அடுத்த சோகையன் தோப்பு பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு பாதுகாப்பு பணிக்காக வந்த தேவிபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் கிராம மக்களை தகாத வார்த்தைகளால் ஒருமையில் பேசி மிரட்டினார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்து சோகையன்தோப்பு கிராம மக்கள் வாக்களிக்காமல் கடந்த 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் அமர்ந்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சோகையன் தோப்பு கிராமத்தை சேர்ந்த ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் என பலரும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் இப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button