ராமநாதபுரத்தில் தொடங்கியது!!!

ராமநாதபுரம் மாவட்ட மக்களின் கோடை விடுமுறையை உற்சாகப்படுத்தும் வகையில்,கேணிக்கரை பகுதியில் உள்ள நல்லம்மாள் திடலில் “ஸ்ரீ சாய்ராம் எண்டெர்டைன்மெண்ட்” நடத்தும் பிரம்மாண்ட ‘ஹாலிவுட் அவதார்’ பொருட்காட்சி நேற்று (மே 1) மாலை 6.00 மணிக்கு கோலாகலமாகத் துவங்கியது.
அவதார் குகை நுழைவாயில்:-
ஹாலிவுட் திரைப்படமான ‘அவதார்’ பாணியிலான பிரம்மாண்ட குகை நுழைவாயில் வழியாக மக்கள் இன்று முதல் ஒரு புதிய மாயாஜால உலகிற்குள் நுழையலாம். மின் விளக்குகளின் ஜொலிப்பில் கலைநயத்துடன் இந்த அரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குளுகுளு ‘Snow World’:-
கோடை வெயிலைத் தணிக்க ராமநாதபுரத்தில் முதல் முறையாகப் பனி உலகம் உருவாக்கப்பட்டுள்ளது.இதில் பொதுமக்கள் நிஜமான பனிப்பொழிவை அனுபவிப்பதோடு,குளுகுளு சூழலில் புகைப்படம் எடுத்து மகிழவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விளையாட்டு மற்றும் சாகசம்:-
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ரசிக்கும் வகையில் ஜெயிண்ட் வீல்,கொலம்பஸ்,டிஸ்கோ மற்றும் டிராகன் ராட்டினங்கள் உள்ளிட்ட பல்வேறு சாகச விளையாட்டுகள் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வருகின்றன.மேலும்,த்ரில்லிங் அனுபவத்தை வழங்கும் பேய் வீடு மற்றும் 3D ஷோ ஆகியவை கூடுதல் ஈர்ப்பாகும்.
நேற்று நடைபெற்ற துவக்க விழாவில் ராமநாதபுரம் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன்,செய்யது அம்மாள் பொறியியல் கல்லாரி தாளாளர் சின்னத்துரை அப்துல்லா,மற்றும் ஏசியன் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் இந்தப் பொருட்காட்சியைத் தொடங்கி வைத்தனர்.ஸ்ரீ சாய்ராம் எண்டெர்டைன்மெண்ட் உரிமையாளர் உதயகுமார் அனைவரையும் வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
குடும்பத் தலைவிகளுக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள்,குழந்தைகளுக்கான பொம்மைகள் மற்றும் பேன்சி பொருட்கள் அடங்கிய நூற்றுக்கணக்கான கடைகள் இன்று முதல் செயல்படத் தொடங்குகின்றன.உணவுப் பிரியர்களுக்காக டெல்லி அப்பளம்,மிளகாய் பஜ்ஜி,ஜிகர்தண்டா மற்றும் விதவிதமான ஐஸ்கிரீம் வகைகள் என நாவூறும் உணவுகளும் தயார் நிலையில் உள்ளன.
கோடை விடுமுறையைக் கொண்டாடவும்,குடும்பத்தோடு பொழுதை கழிக்கவும் ராமநாதபுரத்தின் மிகச்சிறந்த இடமாக இப்பொருட்காட்சி அமையும்.எனவே,ராமநாதபுரம் மாவட்ட மக்கள் அனைவரும் குடும்பத்தோடு வருகை தந்து இந்த ஹாலிவுட் உலகைக் கண்டு மகிழுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.



