தமிழகம்மாவட்டச் செய்திகள்

அமைச்சர்கள் ஆய்வு…!

ராமநாதபுரம் மாவட்டம்,மண்டபம் மற்றும் ராமேசுவரத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் டாக்டர்.க.விஜய கார்த்திகேயன்,மாவட்ட கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில்,தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத்,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வே.க.ராஜீவ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் மண்டபம் பேரூராட்சி,முனைக்காடு கடற்கரை பகுதியில் மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்ட கடற்பாசி விதைகளை தெப்பத்தில் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு மீனவர்களிடம் கேட்டறிந்ததுடன், தொடர்ந்து மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்ட கூண்டு மீன் வளர்ப்பு (கொடுவா, கணவாய்) தொடர்பாகவும் மீனவர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் அப்பகுதியில் வசிக்கும் மீனவர்களிடம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்கள் தொடர்பாகவும், மீனவர்களுடன் கலந்துரையாடி கேட்டறிந்ததுடன், உங்களுக்கு தேவைக்கேற்ற அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து அமைச்சர்கள் மேற்குவாடி மீனவ கிராமத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவுக்கான கட்டுமானப் பணிகள் முடிவு பெற்றுள்ளதையும், ஏல கூடத்திற்கான இறுதி பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு அப்பகுதியில் உள்ள மீனவர்களுடன் கலந்துரையாடினர்.

இந்த ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம்,மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் சின்னகுப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button