ராமநாதபுரம் நகராட்சியில் கலெக்டர் ஆய்வு…!

ராமநாதபுரம் மாவட்டம்,ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் இன்று (10.06.2026) மாவட்ட கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன்,நகராட்சியின் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகள் தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் நகராட்சியின் மூலம் பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்படும் அடிப்படை பணிகளான குடிநீர் விநியோகம்,தெருவிளக்கு பராமரிப்பு,திடக்கழிவு மேலாண்மை,பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்குதல்,சாலைப் பணிகள்,நகராட்சியின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும் அலுவலர்களிடம் கேட்டறிந்ததுடன், மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் தொடர்பாக பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் நகர்ப்புற பகுதியை துாய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும் என அலுவலர்களிடம் தெரிவித்ததுடன்,நகராட்சி அலுவலகத்திற்கு தினந்தோறும் பல்வேறு கோரிக்கைகளுக்காக வருகை தரும் பொதுமக்களை சிரமமின்றி அவர்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்து தகுதியான மனுக்கள் மீது காலதாமதமின்றி உரிய காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களை அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வன்போது இராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் அஜிதாபர்வின்,நகர்நல அலுவலர் டாக்டர்.இரத்தினகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.



