தமிழகம்மாவட்டச் செய்திகள்
அரசு பணிகளுக்கு தேர்வு எழுதுவதற்கான வயதினை உயர்த்த கோரிக்கை!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமாரை சந்தித்து அரசு பணிகளுக்கு தேர்வு எழுதுவதற்கான வயது மற்ற மாநிலங்களில் 45 வரை இருப்பதை சுட்டிக்காட்டி சமூகநீதி பேசும் மாநிலமான தமிழ்நாட்டில் 39 வயது வரை மட்டுமே அரசு தேர்வு எழுத முடியும் என்ற நிலையை மாற்றி 45 வயது வரை அரசு பணிகளுக்கான தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் மற்றும் பைத்துல்மால் கூட்டமைப்பின் மாநில தலைவர் எஸ்.எம். இதயத்துல்லா தலைமையில் காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஏ.ஜெய்னுல் ஆலம் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.



