பரமக்குடியில் மத்திய ஜவுளி துறை அமைச்சகம் சார்பில் பனை ஓலை கைவினைஞர்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி!!!

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மத்திய ஜவுளி துறை அமைச்சகம் சார்பில் ராம்நாடு பணை ஓலை உற்பத்தியாளர் நிறுவனம் இணைந்து நடத்தும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியில் 20 பனை ஓலை கைவினைஞர்களுக்கு ஆறு நாட்கள் நடைபெற்றது. இப்பயிற்சியினை நாகர்கோவில் மத்திய ஜவுளி துறை அமைச்சகம் துணை இயக்குனர் A.K ரூப் சந்தர் அவர்கள் தலைமை தாங்கி பயிற்சியினை தொடங்கி வைத்தார். இப்பயிற்சியில் இராமநாதபுரம் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், பரமக்குடி அரசு. ஐ.டி.ஐ முதல்வர் திரு. எஸ்.பி. வாளை ஆனந்தம், பரமக்குடி அரசு கலைக் கல்லூரி ஆங்கிலத்துறைத் தலைவர் திருமதி எம். ரேணுகாதேவி,இராமநாதபுரம் பணை ஓலை உற்பத்தியாளர் நிறுவனத்தின் சேர்மன் கல்யாணி கார்த்திகேயன் ஆகியோர் கிராமப்புற பெண்களுக்கு வாழ்வாதரத்தை மேம்படுத்தும் வகையில் பல நல்ல கருத்துகளை வழங்கினார். இப்பயிற்சியில் பனை ஓலையில் தயாரிக்கப்படும் பொருட்களை பல்வேறு பனை ஓலையில் தயாரிக்கப்படும் பொருட்களை பல்வேறு வண்ணங்களிலும் வடிவத்திலும் மதிப்பு கூட்டி விற்பனை செய்து வருமானத்தை ஈட்டும் வகையில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது, இந்த பயிற்சியின் மூலம் 20 பனை ஓலை கைவினைஞர்கள் பயன் பெற்று பாராட்டு சான்றிதழ் பெற்றனர்.



