தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழக நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர்,முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோரை சந்தித்து முறையீடு!!!

கடந்த டிச.11 அன்று படிக்காத,மற்ற மாணவிகள் படிப்பதற்கு இடையூறாக இருந்த மாணவியை படிக்கச் சொல்லி அறிவுறுத்தினார்.பள்ளியில் பணியிலிருந்த ஆங்கில பாட முதுநிலை பட்டதாரி ஆசிரியை நேசசெல்வியை வகுப்பறையில் மாணவியர் முன் ஆசிரியரால் அறிவுறுத்தப்பட்ட மாணவி, மாணவியின் தாயார்,மாணவியின் உறவினர் ஆகியோர் சேர்ந்து ஆசிரியரை தாக்கி,ஆபாச வார்த்தைகளால் வசைபாடி உள்ளனர்.
தொண்டியில் உள்ள சில அமைப்புகளுடன் இணைந்து ஆசிரியைக்கு அச்சுறுத்தல்,பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கும் வகையில் முகநூல் பக்கத்தில் காணொளி காட்சி பதிவுகளை பதிவிட்டு ஆசிரியை நேசசெல்விக்கு உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்கள்,தொண்டி மக்களிடம் பதற்றம் ஏற்படுத்தும் அமைப்புகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராமநாதபுரம் முதன்மைக்கல்வி அலுவலர் ரெஜினா,மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆகியோரிடம்
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் அன்பழன்,மாநில பொருளாளர் கார்த்திகேயன்,மாநில அமைப்புச் செயலாளர் முத்தையா,மாநில மகளிர் பிரிவுச் செயலாளர் சுபாஷினி மாநில நிர்வாகிகளின் வழிகாட்டல் படி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்
முறையிட்டனர்.

பாதிக்கப்பட்ட ஆசிரியை நேசசெல்விக்கு உரிய நீதி,பாதுகாப்பு பெற்றுத்தர வேண்டும்.
ஆசிரியை தாக்கியோர் மீது பதிந்த வழக்கு விசாரணையை துரிதமாக நடத்தி சம்மந்தப்பட்டோருக்கு உரிய சட்ட ரீதியான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.ஆசிரியை நேசசெல்வி விரும்பினால் அவரின் பாதுகாப்பு கருதி அவர் விரும்பும் பள்ளிக்கு பணியிட மாறுதல் பெற்றுத்தர வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு பணிப்பாதுகாப்பு சட்டத்தை இயற்ற பரிந்துரை வேண்டும் என வலியுறுத்தினர்.ஆசிரியை நேசசெல்வியுடன்,தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், இந்திய பள்ளி ஆசிரியர்கள் சம்மேளன ஒருங்கிணைப்பாளரும்,தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி
மாவட்டச் செயலாளர் முனியசாமி,தமிழ்நாடு உயர்நிலை,மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் ரமேஷ் கண்ணன்,தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக
நிறுவனத் தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.

மாவட்ட கலெக்டரிடமிருந்து நல்ல தீர்வை ஆசிரியர்கள் எதிர்பார்ப்பதாக தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மாரிச்சாமி தெரிவித்தார்.



