கீழக்கரை அருகே ரூ.1 கோடி மதிப்பிலான யானை தந்தம் பறிமுதல்:மூவர் கைது!!!

இராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரை அருகே ரூ.1 கோடி மதிப்பிலான 4 கிலோ யானை தந்தங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி வாலிபர் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

தமிழகக் கடலோர பகுதிகளில் கடத்தல் சம்பவங்களை கட்டுப்படுத்த கடலோரப் காவல் நிலையங்கள் மூலம் சிறப்புப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.இதன் தொடர்ச்சியாக,இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை,கடற்கரை மீனவர் குப்பம். கிழக்கு புது நகர்,சிவகாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளை கடற்கரை காவல் நிலைய ஆய்வாளர் ஜான்சி ராணி தலைமையில் சார்பு ஆய்வாளர் அய்யனார்,நுண்ணறிவு தலைமை காவலர் மதியழகன்,தலைமை காவலர், திருத்தணிகைவேலன்,முதல்நிலை காவலர் சுரேந்தர் சிங் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை கண்காணித்தனர்.அப்போது கீழக்கரை கடற்கரை சாலை மாதா கோவில் அருகே சந்தேகத்துக்கு இடமாக நின்ற தூத்துக்குடி காதர் பாட்ஷா (27),
சாயல்குடி – அருப்புக்கோட்டை சாலை ஹரி குமார் (29) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.இருவரும் முன்னுக்கு பின் முரணான பதில் கூறினர்.இதை தொடர்ந்து இருவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.அதில் 2 யானை தந்தம் இருந்தன.அவற்றை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.அங்கு எடை போட்டு பார்த்ததில் 3 கிலோ 900 கிராம் இருந்தது.இதன் மதிப்பு ரூ. 1 கோடி என கூறப்படுகிறது.இதில் தொடர்புடைய வாலிநோக்கம் காவா குளத்தைச்சேர்ந்த ஸ்ரீராம் (26) என்பவரை பிடித்து விசாரணைக்கு பின்,மேல் நடவடிக்கைக்காக இராமநாதபுரம் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.



