மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சார்பில் அயலக ஆசிரியர்கள்,மாணவர்கள்,தமிழகக் கலைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பன்னாட்டுப் பயிலரங்கம்!!!

மதுரை காமராசர் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பில் அயலக மாணவர்கள்,ஆசிரியர்கள்,கலைஞர்கள் ஆகியோருக்குத் திறன் மேம்பாட்டுப் பன்னாட்டுப் பயிலரங்கம் மதுரை மாவட்டம்,மீனாட்சிபட்டியில் (அக்.29) ம் தேதியன்று நடைபெற்றது.இதில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புலத் தமிழியல்துறை மற்றும் தமிழ்ப் பண்பாட்டு மரபுச்செல்வங்கள் நடுவம் ஒருங்கிணைத்தனர்.மேலும் இலங்கை, பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை, மதுரை மாவட்ட ஸ்ரீ சனீஸ்வரா அறக்கட்டளை மற்றும் மதுரை திருமாஞ்சோலை பதிப்பகம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து அயல்நாட்டு மாணவர்கள் பரிமாற்றம் மற்றும் “பன்முக நோக்கில் தமிழ்ப் பண்பாடும் கலைகளும்” என்னும் பொருளில் ஆசிரியர்கள்,மாணவர்கள்,கலைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பன்னாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது.இந்நிகழ்வில்,பன்னாட்டுப் பயிலரங்கத்திற்கு வந்திருந்த அனைவரையும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல்துறைத் தலைவரும் தமிழ்ப் பண்பாட்டு மரபுச்செல்வங்கள் நடுவத்தின் இயக்குநர் பொறுப்பாளரும் பன்னாட்டுப் பயிலரங்க ஒருங்கிணைப்பாளருமான முனைவர் போ.சத்தியமூர்த்தி வரவேற்றார்.இப்பன்னாட்டுப் பயிலரங்கத்தை மதுரை காமராசர் பல்கலைக்கழக ரூசா ஒருங்கிணைப்பாளாரும் பேராசிரியருமான முனைவர் க.குமரேசன் தலைமையேற்றுப் பயிலரங்கைத் தொடங்கி வைத்தார்.மதுரை மாவட்ட சுதந்திரப் போராட்டத் தியாகி ஆ.அழகன்பெருமாள் முன்னிலை வகித்தார்.மதுரை மாவட்ட ஸ்ரீ சனீஸ்வரா அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவருமான முனைவர் தி.இராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.தினமலர் மதுரை பதிப்பு செய்தியாசிரியர் வி.ஜி.ரமேஷ் குமார் திறன் மேம்பாட்டுப் பன்னாட்டுப்
பயிலரங்க விழாப் பேருரையாற்றினார். நிகழ்வில்,இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத்
தலைவர் பேராசிரியர் ஸ்ரீ.பிரசாந்தன், முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி பெருமாள் சரவணக்குமார் மற்றும் விரிவுரையாளர்கள் ச.வில்வரசன்,உ.ஜீவதர்சன்,ம.ரோபிகா,எ.மிலானி மற்றும் பலர் சிறப்புரையாற்றினார்கள்.நிகழ்வில் இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழக மாணவ,மாணவியர்கள் முஹம்மது பௌசர் பாத்திமா ஆதிலா, சஜீவினி ரவிச்சந்திரன், பரமேஸ்வரன் விவேதிகா,சுரேஸ் பிரியா,நவரத்தினம் ஜெயானி,கஜினி சிவராஜா,உலகேஸ்பரன் துதேசிகா,பிரதீபன் அலைக் ஷனா, யோகராஜ் லிதுர்சனா,சிவகுமாரன் மதுரா,சுதாகரன் மேரிசா,கஸ்ஸாலி பாத்திமா சஜிதா,பிரபாகரன் ரம்மியா உள்ளிட்ட 20 நபர்களும் திருவண்ணாமலை மாவட்ட தெருக்கூத்து நாடக ஆசிரியர்களும் கலைஞர்களுமான நா.வெங்கட்ராமன், ச.வெங்கடேசன்,நா.வேடியப்பன்,பெ.சுரேஷ் குமார் அ.ரவிச்சந்திரன்,பூ.பாண்டுரங்கன், மு.இராமலிங்கம்,பொ.பாக்கிராஜ், ச.ராமராஜ், கி.முருகன்,க.தங்கம் உள்ளிட்ட 27 பேரும் மற்றும் பிற மாணவர்களும் கலைஞர்களும் கலந்து கொண்டனர். இப்பன்னாட்டுப் பயிரங்கில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்புத் தேனி மாவட்டத் தலைவர் பி.செல்வகுமார், மதுரை மாவட்டத் துணைத் தலைவர் கே.ஆறுமுகசாமி, மற்றும் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் தேனி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.வேல்முருகன்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜ.ஷர்புதீன்,மருத்துவர் அணி இணைச்செயலாளர் ஆர்.இராஜேஷ் கண்ணா, மதுரை மாவட்டப் பிரதிநிகள் ஜி.கே.ராஜேந்திரன்,ஏ.கே.வி.செல்வகுமார்,சோழவந்தான் பழனி,தேனிமாவட்டப் பிரதிநிதிகள் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கண்ணபிரான் நாடகமன்றத்தின் தலைவர் நா.வெங்கட்ராமன்,பாதம் அறக்கட்டளையின் அங்கத்தினர் முனைவர் சி.ஆறுமுகம், க.இருளன் மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர்.பயிலரங்கில் கலந்துகொண்ட ஆசிரியர்கள்,மாணவர்கள்,கலைஞர்கள்,தியாகிகள்,பிற கல்வியாளர்களுகள் ஆகியோரின் பன்முகத் திறன்களைப் பாராட்டி,மதுரை மாவட்ட ஸ்ரீ சனீஸ்வரா அறக்கட்டளை மற்றும் மதுரை திருமாஞ்சோலை பதிப்பகத்தின் சார்பில் சிறந்த தமிழ் ஆசிரியர்,சிறந்த தமிழ் மாணவர்,சிறந்த தியாகச்செம்மல்,சிறந்த தெருக்கூத்துக் கலைஞர் போன்ற பல்வேறு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.குறிப்பாக,இப்பயிலரங்கில் திருவண்ணாமலை ஸ்ரீ கண்ணபிரான் நாடக மன்றத்தின் சார்பில் அதன் ஆசிரியர்கள் தெருக்கூத்து நாடகம் குறித்த பயிற்சியும் நேரடியாக நாடகமும் முழுமையாக நிகழ்த்தினர்.நிறைவாக திருமாஞ்சோலை பதிப்பகத்தின் நிறுவனர் முனைவர் ப.பூஞ்சோலை நன்றி கூறினார்.



