தமிழகம்மாவட்டச் செய்திகள்

இராமநாதபுரம் மாவட்டத்தில் பண்ணைக் குட்டைகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் பலன் பெற்ற பயனாளி தமிழ்நாடு முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி!!!

இராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் உழுவை வாடகைத் திட்டம், வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டம், முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டம், சூரிய மின்வேலி அமைத்தல், சூரிய கூடார உலர்த்திகள் அமைத்தல், மானியத்தில் மின்மோட்டார் பம்பு செட்டுகள் வழங்குதல், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் கட்டமைப்புகளைத் தூர்வாரிப் பராமரித்தல் மற்றும் புதிய நீர் கட்டமைப்புகள்போன்ற திட்டங்கள் விவசாயிகளுக்காக  செயல்படுத்தப்பட்டு வருகின்றன.மேலும்,இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மேற்கூறிய இத்திட்டங்களின் மூலம் 1077 பயனாளிகள் ரூ.3174.36 இலட்சம் மானியத்தில் பயனடைந்துள்ளனர்.தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றி அதன் மூலம் நிகர சாகுபடி பரப்பினை அதிகரித்தல் மற்றும் அனைத்துத் துறை திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதன் மூலமாக கிராமங்களை தன்னிறைவு வளர்ச்சி அடையச் செய்தல் முதலிய நோக்கங்களைக் கொண்டு, இத்திட்டம் 2021-22 ஆம் ஆண்டு முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராம பஞ்சாயத்துகளில் 100 சதவீத மாநில அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் தனிநபர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள் 1600 முதல் 1800 கன மீட்டர் அளவில் அமைத்துக் கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் தங்களது நிலத்திலேயே பண்ணைக்குட்டைகள் மூலம் நீரினை சேமித்து அதன் மூலம் வறட்சி காலங்களில் பாசன வசதி பெறவும், மீன் வளர்ப்பு மூலம் கூடுதல் வருமானம் பெறவும், வழி வகை செய்யப்படுகிறது.இத்திட்டத்தின் மூலம் பண்ணைக்குட்டைகள் பெறுவதற்கு கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்தின் திட்ட பகுதியில் உள்ள விவசாயிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.மேலும் கடந்த 4 ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ், 412 பயனாளிகளுக்கு ரூ.497.89 இலட்சம் மானியத்தில் பண்ணைக்குட்டைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டு உள்ளது, மேலும் நடப்பாண்டில் இதுவரை 80 பயனாளிகளுக்கு ரூ.112 இலட்சம் மானியத்தில் பண்ணைக்குட்டைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டு வருகின்றன,

இத்திட்டத்தில் பயன்பெற்ற பயனாளி தெரிவிக்கையில்:-

என்னுடைய பெயர் மா.வீரலட்சுமி எனது சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம், கலையனூர் கிராமம் பல ஆண்டுகளாக, எங்களுடைய 5.68 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்வது ஒரு தொடர்ச்சியான போராட்டமாகவே இருந்தது. அதிலும் குறிப்பாக, என்னுடைய முக்கியப் பயிரான நெல்சாகுபடி செய்யும் போது, வானிலையுடன் போராட வேண்டியிருந்தது. நெற்பயிர் மிகவும் உணர்திறன் கொண்டது. அதற்குத் தொடர்ந்து, சரியான நேரத்தில் நீர்ப்பாசனம் தேவை. ஒவ்வொரு வறண்ட காலமும் காலமும் எனக்குப் பெரும் பயத்தைக் கொ கொடுத்தது. நாங்கள் முழுமையாக நம்பியிருந்த நெற்பயிர்மகசூல்,எப்போதும் சீரற்று இருந்தது.எங்களுக்குச் சொந்தமான நிலத்தில், தண்ணீர் பற்றாக்குறையால் செடிகள் வளர்ச்சி குன்றி, நெற்பயிர் காய்ந்துபோய் அறுவடை குறைந்த அளவிலே கிடைத்தது. அந்தக் குறைவான வருமானம், சாகுபடிச் செலவைக்கூட ஈடுகட்டவில்லை. மழை இல்லாததால், நிலத்தில் போட்ட உழைப்பு காய்ந்து போவதைப் பார்க்கும்போது, நான் மிகவும் கவலை அடைந்தேன்.அப்போதுதான், வேளாண் பொறியியல் துறை எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. அவர்கள் வந்து, “கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம்”, 2024-25-ஐப் பற்றி விளக்கினார்கள். அதிலும் குறிப்பாக, என்னுடைய நிலத்திலேயே பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டத்தைப் பற்றி எடுத்துரைத்தார்கள்.உடனடியாக, அந்தத் திட்டத்தைப் பற்றிய ஒரு புரிதல் எனக்கு வந்தது ஒரு பண்ணைக்குட்டை அமைத்து, விலைமதிப்பற்ற பருவமழையின் ஒவ்வொரு துளியையும் சேகரிப்பது. இதன் மூலம், தற்காலிகமான நீர்வளத்தை ஒரு நிரந்தரச் சொத்தாக மாற்ற முடியும் என்று நான் கண்டேன். இத்திட்டத்தை அறிவியல் பூர்வமாக வடிவமைத்து, நிறைவேற்றுவது வரை, அத்துறையின் அதிகாரிகள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் எனக்கு உதவினார்கள்.சமீபத்தில் பருவமழை பெய்தபோது, என்னுடைய சொந்தப் பண்ணைக்குட்டையில் மழைநீர் சேகரிப்பதையும், தேங்குவதையும் பார்த்தது உண்மையிலேயே எனக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. மேலும், சுற்றுவட்டாரங்களில் உள்ள கிணறுகள் வறண்டு போயிருந்த முக்கியமான நெற்கதிர் விடும் காலகட்டத்தில், நான் பண்ணைக்குட்டை நீரைத் நீர்ப்பாசனத்திற்காகப் பயன்படுத்தினேன். இந்தச் சரியான நேரத்தில் நீர்பாசனம் கொடுத்தது செழிப்பான அறுவடைக்கு காரணமாக இருந்தது. நெல்மணிகள் தரமாகவும், ஏராளமாகவும் இருந்தன. இதன் விளைவாக, எனக்குக் கிடைத்த மகசூல், என்னுடைய முந்தைய அறுவடைகளை விடப் பலமடங்கு சிறப்பாக இருந்தது.பண்ணைக் குட்டையில் உறுதி செய்யப்பட்ட நீர்வளம் கிடைத்ததன் காரணமாக, என்னுடைய வருமானம் இந்த ஆண்டு நிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், கணிசமான அளவு உயர்ந்துள்ளது. மேலும், என்னால் வருங்காலத்தில் பல ஆண்டுகள் வெற்றிகரமாகச் சாகுபடி செய்ய முடியும் என்ற உறுதியையும் எனக்குக் கொடுத்திருக்கிறது.என்னைப் போன்ற விவசாயிகளின் துயர்துடைத்திடும் வகையில் பல எண்ணற்ற வேளாண்மை சார்ந்த திட்டங்களை அறிவித்து குறி அறிவித்து குறிப்பாக பண்ணைக்குட்டைகள் பண்ணைக்குட்டைகள் போன்ற திட்டத்தை வழங்கி எங்கள் துயர்துடைக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு என் சார்பிளும், என் குடும்பத்தின் சார்பிளும் நெஞ்சார்நத நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button