பணிமனை அமைக்க கோரிக்கை:மமக கவுன்சிலர் தொண்டி பெரியசாமி!!!

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமா கோரிக்கை விடுத்து வருகின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொண்டியை மையமாக வைத்து 50 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் போதிய போக்குவரத்து வசதி இல்லாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.திருவாடானை உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் காத்திருக்க வேண்டியுள்ளது. இது பல்வேறு அச்சத்தை ஏற்படுத்துகிறது. கடந்த பல வருடங்களாக தொண்டியை மையமாக வைத்து பணிமனை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இடம் தேர்வு செய்வதும் அதிகாரிகள் ஆய்வு செய்வதும் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்படுவதும் தெடர் கதையாக உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி இப்பகுதியில் போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மமக மாவட்ட துணை செயலாளர் தொண்டி கவுன்சிலர் பெரியசாமி கூறுகையில்:-
தொண்டியில் போக்கு வரத்து பணி மனை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை . கடந்த கால ஆட்சியில் இது குறித்து எவ்வித முயற்ச்சியும் செய்யவில்லை. தொண்டியை மையமாக வைத்து பணிமனை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் . அரசியல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொண்டியில் பணிமனை அமைவது புறக்கணிக்கப்படுகிறது. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.



