இராமநாதபுரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்:காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ அறிக்கை!!!

இராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (S.I.R) கொண்டு வந்துள்ள இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வருகிற 11.11.2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணியளவில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.எனவே இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி மாநில,மாவட்ட நிர்வாகிகள்,ஒன்றிய,நகர,பேரூர் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்,செயற்குழு,பொதுக்குழு உறுப்பினர்கள்,சார்பு அணிகளின் அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள்,அணிகளின் நிர்வாகிகள்,கிளை,வார்டு செயலாளர்கள்,முன்னாள்,இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள்,மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



